மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 5 ஜூன், 2021

சுரம் - சளி சுரம் (Influenza)

01.  அமுக்கரா வேர்ச் சூரணம், தூதுவேளைச் சூரணம் சமனெடை கலந்து 5 கிராம் நெய், பால், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் கலந்து, தினம் 3 வேளை பத்தியத்துடன் கொடுத்து வர சளிக் காய்ச்சல் தீரும்.

 

02.  அமுக்கரா வேர்ப் பொடி, தூதுவேளைப் பொடி இரண்டும் சேர்த்து இரண்டு கிராம் எடுத்து பாலில் கலநது கொடுத்து வந்தால் சளிக் காய்ச்சல் சரியாகும்.(1698)

 

03.  ஆடாதொடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சம அளவு எடுத்து  இடித்து சலித்து  ஒன்றாகக் கலந்து அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய், சுவாசகாசம், இருமல், சளிச்சுரம், சளி, நரம்பு இழுப்பு, குடைச்சல் ஆகியவை குணப்படும்.

 

04.  ஆடாதோடை இலைகள் 10 எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி தேன் கலந்து காலை மாலை பருகி வந்தால் சளிச்சுரம் தீரும்.(1696)

 

05.  ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சம அளவு எடுத்து இடித்து, சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சளிக் காய்ச்சல் தீரும்.

 

06.  ஓமவல்லி இலைக் காம்புகளைக் குடி நீராக்கி (கஷாயம்) உள்ளுக்குக் கொடுத்தால் சளிக் காய்ச்சல் தீரும். (196)

 

07.  கண்டங்கத்தரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், கொத்தமல்லி 30 கிராம், சீரகம் ஒரு கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 100 மி.லி. வீதம் தினசரி 3 வேளை அருந்தி வந்தால் சளிக் காய்ச்சல் தீரும்.

 

08.  கண்டங்கத்தரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி ஒரு பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க குளிர்காய்ச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும்.

 

09.  கண்டங்கத்தரி வேர் சுக்கு, கொத்துமல்லி விதை, சீரகம் ஆகியவை சேர்த்துக் கசாயம் வைத்து வேளைக்கு 30 மி.லி வீதம் குடித்து வந்தால் சளிக் காய்ச்சல் குணமாகும்.(1695)

 

10.  கண்டங்கத்தரியின் வேரைக் கசாயம் செய்து குடித்து வந்தால், சளி காய்ச்சலுக்கு நல்லது, காயைச் சமைத்து உண்டு வந்தால் பசியைத் தூண்டும். சளியை வெளியேற்றும்.

 

11.  நல்ல வேளை இலை 30 கிராம் சுக்கு ஒரு துண்டு, மிளகு 6 , சீரகம் ஒரு கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி தினமும் 3 வேளை கொடுத்து வந்தால் சளிக் காய்ச்சல் தீரும்.

 

12.  நிலவேம்பு சமூலத்துடன், மிளகு, சுக்கு, வெட்டிவேர், சந்தனம், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல் சமூலம், பற்படாகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து கால் பங்காகக் காய்ச்சி, வடிகட்டி காலை மாலையாக இரண்டு வேளைகள், தலா 60 மி.லி வீதம் குடித்து வந்தால் அனைத்து விதமான சுரங்களும் தீரும். டெங்கு போன்ற சுரமும் குணமாகும்.

 

13.  விராலிப் பட்டையை உலர்த்திப் பொடித்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டுவரச் சளி, சளிக் காய்ச்சல், முறைக்காய்ச்சல், மலேரியா முதலிய நோய்கள் தீரும். கண்டங்கத்தரி சமூலம் ஒரு பிடி, ஆடாதோடை இலை ஒரு பிடி, விஷ்ணுகாந்தி, பற்படாகம் இரண்டும் ஒரு பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி4 முதல் 6 முறை 100 மி.லி வீதம் சாப்பிட புளூ (Flu) சுரம், நிமோனியா சுரம், மண்டை நீரேற்றக் காய்ச்சல் முதலியவை தீரும்

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )22]

{05-06-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக