மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 6 ஜூலை, 2021

நீரிழிவு (Diabetes)

 

 

01.  அத்திப் பால் 15 மி.லி. யுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து, காலை மாலை கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறு நீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

 

02.  அல்லி இதழ்களை மட்டும் சேகரித்து அதனுடன் 200 மி.லி நீர் விட்டுக் காய்ச்சிப் பாதியாக வற்றியதும் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

 

03.  அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்துப் பொடியாக்கி 1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர, வெள்ளை நோய் குணமாகும். நீரிழிவு நோய் தீரும். ஆண்மை பெருகும்

 

04.  ஆலமரப் பட்டை, ஆலம் வேர்ப் பட்டை வகைக்கு 200 கிராம் சிதைத்து 4 லிட்டர் நீரில் போட்டு 2 லிட்டராகக்  காய்ச்சி, காலையில் மட்டும் ஒரு குவளை குடித்து வரலாம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை இதைத் தயாரித்துக் கொள்ளலாம். ஒன்றரை மாதம் முதல் 6 மாதம் வரைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு தீரும்.

 

05.  ஆலம் விழுது, நாவல் பட்டை, மருதம் பட்டை ஆகியவற்றைச் சேகரித்து கசாயம் செய்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மதுமேகம் (நீரிழிவு)  குணமாகும்.(1466)

 

06.  ஆவாரம் பூ தினசரி 5 பூக்கள் மென்று தின்று வந்தால் சர்க்கரை நோய் கட்டுப் படும். (332)

 

07.  ஆவாரம் பூ, கறிவேப்பிலை, நெல்லிக் காய் சேர்த்து குடிநீர் (கசாயம்)  செய்து பருகினால் சர்க்கரை நோய் கட்டுப்படும். (334)

 

08.  ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, காலை மாலை இரு வேளைகள் கசாயம் செய்து அருந்தி வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.

 

09.  ஆவாரை வேர், கொன்றை வேர், நாவற் பட்டை, கோரைக் கிழங்கு, கோஷ்டம் ஆகியவை சம அளவு கலந்து இடித்துப் பொடி செய்து நாள்தோறும் ஒரு தேக்கரண்டி வீதம் வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். நாளடைவில் குணமாகும். (337)

 

10.  ஆவாரையின் பஞ்சாங்கச் சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை என 3 வேளையும் ,வேளைக்கு 10 கிராம் வீதம் வெந்நீரில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டுவர நீரிழிவு குணமாகும்

 

11.  ஆவாரை விதை, கடுகு, கருவேலம் பிசின், மரமஞ்சளைப் பொடித்து, சூரணமாக்கி, தினம் 2 கிராம் சாப்பிட்டு வாருங்கள் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

 

12.  இலுப்பை மரப் பட்டை 50 கிராம் ஒரு லிட்டர் நீரில் இட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி காலை மாலை இரு வேளையாக அதைச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் நீங்கும்.

 

13.  எள்ளைப் பொரித்து, வேக வைத்த முருங்கைக் கீரையுடன் கலந்து உண்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.(339)

 

14.  கட்டுக்கொடி இலை, வேப்பங்கொழுந்து சம அளவு எடுத்து அரைத்து காலை மட்டும் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.

 

15.  கருங்காலிப் பட்டை, மருதம் பட்டை, ஆலம்பட்டை, அரசம் பட்டை, ஆவாரம் பட்டை ஆகியவை தலா 50 கிராம், வெந்தயம், நாவல் கொட்டை, வில்வ ஓடு, மாதுளைத் தோல், மாம் பருப்பு, தலா 20 கிராம்  எடுத்து பொடித்து 5 கிராம் வீதம் காலை மாலை நீரில் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும்.

 

16.  கறிவேப்பிலைக் கொத்துகளின் சாறினை எடுத்து தொடர்ந்து 21 நாள்கள் காலை மாலை என இருவேளைகள் 10 மி.லி உட்கொண்டு வந்தால் நீரிழிவு குறையும்.

 

17.  கொன்றைப் பூவைப் பறித்து வந்து சுத்தம் செய்து மைய அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.(329)

 

18.  கொன்றை வேர், ஆவாரை வேர், நாவல் மரப் பட்டை, கோரைக் கிழங்கு கோஷ்டம் ஆகியவை சம அளவு எடுத்து இடித்து, பொடி செய்து, இந்தப் பொடியில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலக்கிக் குடித்து வந்தால், சர்க்கரை நோய் கட்டுப்படும். நாளடைவில் குணமாகும்.(337)

 

19.  கோவைக் காய் தினசரி இரண்டு காய்களைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் மதுமேகத்தை ( நீரிழிவை ) தடுக்கலாம்.(619)

 

20.  சிலந்தி நாயகத்தின் இலைகளைக் கொண்டு வந்து நைத்து  சாறு எடுத்து 200 மி.லி காய்ச்சிய பசுவின் பாலில் 2 தேக்கரண்டி அளவு விட்டுக் கலந்து காலை மாலையாக தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

 

21.  சிறியா நங்கை ( நிலவேம்பு )  நீரிழிவுக்கு மிக அருமையான மருந்து. தினசரி இரண்டொரு இலைகளைத் தின்று வந்தாலோ அல்லது சில இலைகளைப் போட்டுக் குடிநீர் செய்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தாலோ நீரிழிவு விலகிவிடும் (சிறியாநங்கை  படம் காண்க)

 

22.  சிறியாநங்கை இலைகளைச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவுப் பாதிப்புகள் தடுக்கப்படும்.(333)

 

23.  சிறு குறிஞ்சான் இலை மற்றும் நாவல் கொட்டையை  தேவையான அளவு எடுத்து, நிழலில் உலர்த்தி, பொடித்து வைத்துக் கொண்டு, தினமும் காலை ஒரு குவளை தண்ணீருக்கு ஒரு தேக்கரண்டி பொடி வீதம் போட்டுக் காய்ச்சி, கசாயமாக்கி அருந்தி வந்தாலும், நீரிழிவு கட்டுக்குள் வரும்.

 

24.  சிறு குறிஞ்சான் இலைகளை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து, அதில் பத்தில் ஒரு பங்கு வால்மிளகுத் தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, அதிலிருந்து 5 கிராம் எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிடுங்கள். நீரிழிவு நோய் குறையும்.

 

25.  சிறு குறிஞ்சான் இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்திப் பொடித்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

 

26.  சிறு குறிஞ்சான் இலைப் பொடி, சிறியாநங்கை இலைப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, வெந்தயப் பொடி, ஆகியவற்றை தலா அரைத் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து  ஒரு தம்ளர் நீரில் கலந்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வரலாம். சர்க்கரை நோய்த் தாக்கம் குறையும்.

 

27.  சிறு குறிஞ்சான் இலையைப் பறித்து  நீரிழிவு நோயாளிகள் தினசரி ஒன்று வீதம் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

 

28.  சிறுகுறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

.

29.  சிறுகுறிஞ்சான் இலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, அதனுடன் தேவையான அளவு நீர் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அவித்து, வாரம் இருமுறை உட்கொண்டாலும் சர்க்கரை நோய் குறையும்.

 

30.  சிறுகுறிஞ்சான் இலைகளை வாரம் இருமுறை  உணவில் சேர்த்து வந்தால், உடல் சூடு தணியும்; நீரிழிவு கட்டுப்படும்.

 

31.  சிறுகுறிஞ்சான் இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்திப் பொடித்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

 

32.  சிறுகுறிஞ்சான் இலைப் பொடியுடன் நாவல் கொட்டைப் பொடியும் சேர்த்து 500 மி.கி  முதல் 1 கிராம் வரை  உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

 

33.  சிறுகுறிஞ்சான் இலையைப் பாலில் அவித்து நிழலில் உலர்த்தி மாப் போல் பொடித்து காலை உணவுக்குப் பின்னும், இரவு உணவுக்குப் பின்னும் ஒரு கிராம் எடை அளவாக உண்டுவர, நீரிழிவு நோய் கட்டுப் படும்; குணமடையும்

 

34.  சீந்தில் கொடி, நெற்பொரி இரண்டையும் சேர்த்து நீரில் சுண்டக் காய்ச்சி, காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வந்தால் மதுமேகம் மூலம் உண்டான வெப்பம் தணியும்.(947)

 

35.  சீந்தில் கொடிகளை [முதிர்ந்த கொடி] உலர்த்திப் பொடி செய்து காலை மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மதுமேகம் ( நீரிழிவு ) நீங்கும்.  உடல் உரம் பெறும். (477)

 

36.  சீந்தில் கொடிச் சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.(328)

 

37.  சீந்தில் கொடியைப் பொடி செய்து காலை மாலை இரு வேளையும் 5 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்

 

38.  துளசி இலைகளை தினசரி பத்து எண்ணிக்கை அளவுக்கு வாயிலிட்டு மென்று தின்றாலும் நீரிழிவு கட்டுப்படும்.

 

39.  தூதுவேளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.

 

40.  தென்னங் காய் [இளம்காய்] உரி மட்டையை இடித்துப் பிழிந்த நீரை தினசரி காலையில் மட்டும் 100 மி.லி. வீதம் குடித்து வர நீரிழிவு குணமாகும்.

 

41.  நன்னாரி வேரை ஊற வைத்து வடிகட்டி குடித்து வந்தால்  நீரிழிவு தீரும்.   (1378)

 

42.  நாவல் கொட்டை சூரணம் இரண்டு கிராம் நீரில் கலந்து காலை மாலை பருகி வந்தால் மது மேகம் ( நீரிழிவு ), அதிமூத்திரம் ஆகியவை கட்டுப் படும் (623)

 

43.  நாவல் கொட்டைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து, ஒரு கிராம் அளவு தூளை காலை மாலையில் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப் படும்.

 

44.  நாவல் பட்டைச் சூரணம் 2 கிராம் ஆறிய வெந்நீரில் கலந்து காலை மாலை 2 வேளை குடித்துவர நீரிழிவு தீரும்.

 

45.  நாவற்பட்டைச் சாறு, மிதிபாகல் இலைச் சாறு அல்லது மிதிபாகல் பழச் சாறு ஆகியவை எடுத்து ஒன்றாகக் கலந்து தினசரி 20 மி.லி குடித்து வந்தால் மதுமேகம் (நீரிழிவு) குணமாகும். (1447)

 

46.  நாவல்பட்டை குடிநீர் 100 மி.லி காலை மாலை சப்பிட்டு வந்தால் நீரிழிவு தீரும்.

 

47.  நித்திய கல்யாணியின் வேரை நிழலில் உலர்த்தி நன்கு உலர்ந்த பின் இடித்து,  பொடித்து, வெள்ளைத் துணியிலிட்டுச் சலித்து எடுத்த சூரணம் ஒரு சிட்டிகையை வெந்நீரில் தினமும்  2 அல்லது 3 முறை கொடுத்து வந்தால், சிறு நீரில் சர்க்கரையின் அளவு குறையும்.. சர்க்கரை நோய் கட்டுப்படும்.(330) (1323)

 

48.  நிலப்பனைக் கிழங்கின்  மேல் தோலையும் உள் நரம்பையும் போக்கி, உலர்த்திப் பொடித்து 5 கிராம் பொடியுடன் சர்க்கரை கூட்டிப் பாலுடன் கலந்து, காலை மாலை உட்கொள்ள நீரிழிவு நோய் போகும்

 

49.  நெல்லிக்காய்ச் சாறு 15 மி.லி  எடுத்து அதில் சுண்டைகாய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர, நீரிழிவு நோய் குணமாகும்.

 

50.  நெல்லிக்காய்ச் சாறு 15 மி.லி, தேன் 15 மி.லி, எலுமிச்சம் பழச் சாறு 15 மி.லி, கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர நீரிழிவு தீரும்.

 

51.  நெல்லிகாய் சாறில் மஞ்சள் பொடியைத் தூவி, காய்ச்சி காலை மாலை அருந்தி வந்தால் மதுமேகம் (நீரிழிவு)  குணமாகும்.  (1489)

 

52.  பாகற் காய் சாப்பிட்டு வந்தாலும், சிறுகுறிஞ்சான் இலைப் பொடி சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் கட்டுப் படும். (335) (1922)

 

53.  பாகற்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் விரைந்து குணமாகும்.  (1262)

 

54.  மருதம் பட்டை 50 கிராம், நாவல் பட்டை 50 கிராம், ஆலம் விழுது 50 கிராம் அரை லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சிக் கால் லிட்டராக்கி வடிக்கட்டி,125 மி.லி வீதம்  காலை மாலை 2 மாதம் முதம் 3 மாதம் வரைச் சப்பிட்டு வர நீரிழிவு தீரும்.

 

55.  மிதிபாகல் பழம், மிதிபாகல் இலை, நாவல் பட்டை ஆகியவற்றின் சாறு எடுத்துக் கலந்து காலையில் மட்டும் 30 மி.லி வீதம் குடித்து வர 40, 80, 120 நாள்களில் நீரிழிவு தீரும். புலால் உணவை நீக்குக.

 

56.  முருங்கைக் கீரையை வேக வைத்து, அத்துடன் எள்ளினைப் பொரித்துப் போட்டுக் கலந்து உண்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.(339)

 

57.  விடத்தேர், விளா, கட்டுக்கொடி இவற்றின் கொழுந்து, ஆவாரம் பட்டை, இவற்றைச் சமனளவு சேர்த்து அரைத்து அதை 10 கிராம் அளவுக்கு மோரில் கலந்து காலை மாலை இரு வேளையிலுமாக 20 நாள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் நீங்கும்.

 

58.  விளாமர வேர், ஆவாரை வேர், பூலா வேர், காட்டு மல்லி வேர், இலவங்கம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, எருமை மோரில் நன்கு வேக வைத்து, குறிப்பிட்ட அளவு தயிருடன் கலந்து அருந்தி வர, நீரிழிவு விரைவில் குணமாகும்..

 

59.  வெந்தயத்தைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

 

60.  வெந்தயப் பொடியை வேளைக்கு ஒருதேக்கரண்டி வீதம் தினசரி காலை, மாலை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.   (614)

 

61.  வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்து அதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு காய்ச்சி அரை லிட்டராகச் சுண்டியபின் அதனை வடிகட்டி அதனுடன் அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்கு காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதில் 30 மி.லி அளவு எடுத்து அதை 100 மி.லி பசும் பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உடல் வெப்பம் தணியும். இரத்தக் கொதிப்பும், நீரிழிவு நோயும் கட்டுப்படும். வெள்ளை நோய், மேகவெட்டை குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்.

 

62.  வேம்புப் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை தேன், நெய், பால், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் கலந்து தினசரி காலை மட்டும் 3 மாதம் தொடர்ந்து கொடுக்க, எந்த மருந்திலும் கட்டுப்படாத நீரிழிவு இதில் கட்டுப்படும்.


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக