01. ஆவாரம் பூவை தினசரி ஐந்து எண்ணிக்கையில் வாயிலிட்டு மென்று தின்று வந்தால் நீரிழிவு
கட்டுக்குள் இருக்கும்.
02. ஆவாரம் பூவைத் தேனீர்போன்று செய்து அருந்தி வந்தால், நீரிழிவு கட்டுப் படும்.
03. உளுந்தால் செய்த உணவு வகைகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆவியில் வேகவைத்து உண்ணலாம். (338)
04. கொத்துமல்லிக்கு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைத் தணித்து, இன்சுலின் சுரப்பைத் தூண்டி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.
05. கொய்யாப் பழம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் நேராது.(1211)
06. கோதுமை உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. .நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.(1243)
07. கோவைக் காய் இரண்டை தினசரி பச்சையாகச் சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத்
தடுக்கலாம்.(619)
08. கோவைப் பழம் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப் படும் (331)
09. நமது அன்றாட உணவில்
காரம், புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு ஆகிய 4 வகைச் சத்துப் பொருள்கள்
மட்டுமே சேர்க்கப் படுகின்றன. துவர்ப்பு, கசப்புச் சத்துக்கள் தரும்
காய்களோ பொருள்களோ மிக மிக அரிதாகவே சேர்க்கப் படுகின்றன. துவர்ப்பு, கசப்புச் சுவையுள்ள சத்துப்
பொருள்களின் பற்றாக் குறையே நீரிழிவு நோயாக வெளிப்படுகிறது. எனவே, நீரிழிவு நோய்க்கு ஆளானோர் துவர்ப்பு மற்றும் கசப்புச் சத்துள்ள காய்களையும், கீரைகளையும், கடைச் சரக்குகளையும் தமது
அன்றாட உணவில் கட்டாயம் அதிகப்படியாகச் சேர்த்து வருவார்களேயானால் நீரிழிவு
நோயினின்று வெகு விரைவில் விடுபடலாம் என்பதில் சந்தேகமில்லை.
10. நாவல்பழம், பாகற்காய், அவரைப் பிஞ்சு ஆகியவற்றை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. (341)
11. நெல்லிக் காயும் நீர்மோரும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தாகத்திற்கு நல்ல பலன் தரும்.(340)
12. முருங்கைக் கீரையை வேக வைத்து, அத்துடன் எள்ளினைப் பொரித்துப் போட்டுக் கலந்து உண்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.(339)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]
{06-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக