மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 1 ஜூலை, 2021

தொண்டை - விக்கல் (Hiccup)

 

01.  கடுக்காய்த் தோலை மைய இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு விக்கல் வரும்போது, கால் தேக்கரண்டி தூளினைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் விக்கல் தீரும். (260)

 

02.  சீனி ஒரு தேக்கரண்டி எடுத்து வாயில் போட்டு, சீனி கரைந்த உமிழ் நீரை விழுங்கி வந்தால் விக்கல் தீரும்.

 

03.  நாய்த் துளசி இலைச் சாற்றில் 30 துளி சிறிது பாலுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் விக்கல், இருமல், மாந்தக் கழிச்சல்  ஆகியவை குணமாகும். (123)

 

04.  நெல்லிக் காயை இடித்துச் சாறு பிழிந்து, தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் தீரும். (1135)

 

05.  மாவிலையை [முற்றிய இலை] பொடியாக்கி தணலில் போட்டு சுவாசிக்க, விக்கல் தீரும். (253)

 

06.  மூச்சை சிறிது நேரம் அடக்கி நுரையீரலுக்கு செயற்கையான அழுத்தம் கொடுத்தால் விக்கல் தீரும்.

 

07.  விரலி மஞ்சளைச் சுட்டுக் கரியாக்கி தேனிலோ வெந்நீரிலோ உண்ணலாம். இதனால் விக்கல் குணமாகும். (255)

 

08.  வெந்நீரை முடக்கு முடக்காகக் குடித்தால் விக்கல் தீரும்.  [குடிக்கும் அளவுக்கு சூடு இருத்தல் வேண்டும்]

 

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]

{01-07-2021}

==========================================================

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக