01. பூவரசு மரத்தின்
வேர், பட்டை
ஆகியவற்றை எடுத்து
வந்து நீரில்
இட்டுக் காய்ச்சி,
கழாயம் செய்து
வாய் கொப்பளித்து
வந்தால், தொண்டை வலி சரியாகும். (068)
02. விளக்கெண்ணெயும் சுண்ணாம்பும்
கலந்து அடுப்பில்
சூடு செய்து
பொறுக்கும் பதத்தில்
தொண்டை வலி
குணமாக தொண்டையில்
தடவ வேண்டும்.
இரவில் படுக்கைக்குச்
செல்லும் முன்
இவ்வாறு செய்தால்
மறுநாள் காலையில் தொண்டை வலி நீங்கியிருப்பதை உணரலாம்.
(076) (081)
03. கிருஷ்ண துளசி இலைகள்
ஐந்து எடுத்து
காலை மாலை
வாயிலிட்டு மென்று
தின்று வந்தால்
தொண்டை வலி சரியாகும். (077)
04. அதிமதுரப் பொடி
ஒரு கிராம்
எடுத்து சிறிது
சர்க்கரை சேர்த்து
காலை மாலை
இரு வேளையும்
சாப்பிட்டு வந்தால்
தொண்டை வலி குணமாகும். சளி,
இருமல் இருந்தால்
அவையும் குணமாகும்
(133)
05. ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு சேர்த்து அரைத்து நீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி தீரும்.
06. விளக்கெண்ணெயும் சுண்ணாம்பும் கலந்து அடுப்பில் சூடு செய்து, பொறுக்கும் சூட்டில் தொண்டையில் தடவினால், தொண்டை வலி குணமாகும். (076) (1931)
07. வெள்ளரி இலைப் பொடியும், சீரகப் பொடியும் சம அளவு எடுத்து, அரைத் தேக்கரண்டி தேனில் குழைத்து அருந்தினால் தொண்டையில் உண்டாகும் வீக்கம், வலி ஆகியவை குணமாகும்.
=======================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்
சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து
எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]
{01-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக