01. அதிமதுரப் பொடி ஒன்று அல்லது இரண்டு கிராம் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி தீரும்.(088)
02. அத்திப் பழம் தினந்தோறும் ஐந்து சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி சரியாகும்.(506) (1200)
03. அமுக்கராங் கிழங்குப் பொடி 2 பங்கும், கற்கண்டு 5 பங்கும் சேர்த்து, வேளைக்கு 5 கிராம் காலை மாலை உட்கொண்டு 200 மி.லி. பசும்பால் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
04. அரைக்கீரைக்கு நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் தன்மையுண்டு. எனவே இதை அடிக்கடி உணவுடன் சேர்த்து வருவது உடலுக்கு நலம் தரும்.(1232)
05. உளுந்துத் தைலத்தை உடல் முழுக்கத் தடவி அழுத்திப் பிடித்து விட்டால் ( மசாஜ் ) நரம்புத் தளர்ச்சி சரியாகிவிடும்.(814)
06. ஏலப்பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்கும். ஏலப்பொடியுடன் திராட்சைச் சாறு சேர்த்து உட்கொண்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
07. ஓரிதழ் தாமரை, விஷ்ணுகிராந்தி இலை,
கீழாநெல்லி ஆகியவை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி அரைத்து கால் கிராம் அளவுக்கு இரவு உணவுக்குமுன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி சரியாகும்.(1550) உடல் பலம் பெறும் (1562)
08. சுக்கு, அமுக்கராங் கிழங்கு, பாதாம் பருப்பு, உலர்ந்த பேரீச்சம் பழம், கற்கண்டு ஆகியவற்றை எடுத்து, அரைத்து, காய்ச்சிய பசும்பாலில் கலந்து தேன் – நெய் சேர்த்து, மீண்டும் சூடாக்கி இறக்கவும். இதைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
09.
செண்பகப் பூவைக் கசாயம் செய்து அதனுடன் பனங் கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். [ அதிகச் சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். ]
10. சேப்பங் கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தால், நரம்பு பலவீனம் மாறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். ஆண்மை பெருகும். (467) (807)
(2021)
11. தென்னம் பாளையில் (வெடிக்காத பாளை) உள்ள பிஞ்சுகளை எடுத்து பசும் பால் விட்டு அரைத்து வேளைக்கு 2 கிராம் வீதம் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.(1420) தாது மிடுப்பு உண்டாகும்.(1435) விரைவாதம் நீங்கும்.(1458)
12. நூல்கோல் கிழங்கு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். (773)
13. பிரமிப் பூண்டு இலைப் பொடியை ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு தேனுடன் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
14. மாதுளம் பழச் சாறுடன் தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி சரியாகும்.(536) (748)
15. வசம்புப் பொடி, துளசி, திப்பிலி, சர்க்கரை கலந்து இடித்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
16. வசம்பைப் பொடியாக்கி, அரைத் தேக்கரண்டி தூளுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் 40 நாட்களில் நரம்புத் தளர்ச்சிக்குப் பலன் கிடைக்கும்.
17. விளாம் பழத்தின் சதையை வெல்லத்துடன் பிசறிச் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமாகும்.
18. விஷ்ணுகிராந்தி இலை, ஓரிதழ்
தாமரை, கீழாநெல்லி ஆகியவை
சம அளவு எடுத்து அரைத்து கால் கிராம் இரவு உணவுக்கு முன் பாலில் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
(1550)
19. வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது பன்ங் கற்கண்டு சேர்த்து வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.(940)
20. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.(783)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]
{06-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக