மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 6 ஜூலை, 2021

நரம்பு - வலுவடைய (Strengthening of nerves)

 

01.   இலவங்கப் பட்டைத் தூள் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து தினம் இரு வேளைகள் அருந்தி வந்தால் நரம்புகள் வலுப் பெறும். மேலும் பக்கவாத்ததால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு இது பெரிதும் உதவும். (Harish)

 

02.   உளுத்தம் பருப்பு உணவு வகைகளை அதிகமாக உண்டு வருவதால் இடுப்புப் பகுதி நரம்புகள் பலம் பெறும்.(797)

 

03.   கொத்துமல்லிக் கீரையை மிகுதியாகப் பயன்படுத்தி வந்தால் நரம்புகளின் பலம் பெருகும்.(804)

 

04.      கோபுரம் தாங்கிச் செடியின் வேர் எடுத்து நிழலில் உலர்த்தி, இடித்து, பொடியாக்கி கற்கண்டுப் பொடியை அதனுடன்  சேர்த்து, இப்பொடியில் அரை தேக்கரண்டி எடுத்து நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நரம்புகளும் தசையும் வலுப் பெறும்.(1385)

 

05.   சீரகத்தை இலேசாக வறுத்து, கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வாருங்கள். நரம்புகள் வலுவடையும்.

 

06.   சேப்பங் கிழங்கு  உணவுகள் நரம்புகளை நன்கு  பலப் படுத்தும்.(807)

 

07.   பூனைக் காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி மாலை வேளையில் மட்டும் 30 மி.லி. சாப்பிட்டு வர நரம்புகள் பலப்படும்.(815)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக