01.
கழற்சி இலைகளைப் போட்டுக் காய்ச்சி வடித்த நீரை வாய் கொப்பளிக்கவும். தொண்டைக் கட்டு அகலும்.
02.
சுக்கை ஒரு துண்டு மென்று சாப்பிடுங்கள். பல் வலி, தொண்டைக் கட்டு நீங்கும்.
03.
தான்றிக் காயை சிறு துண்டு வாயில் இட்டு மென்று சுவைத்தால் தொண்டைகட்டு தீரும்.
04.
தான்றியின் இளந்தளிர்களைப் பறித்து சாறு பிழிந்து, மூன்று வேளை குடித்தால் தொண்டைகட்டு, கோழை சீராகும்.
05. திப்பிலியை நெய்யில் வறுத்து, பொடித்து, கால் தேக்கரண்டி வீதம் தினமும் காலை மாலையில் தேனில் குழைத்து உட்கொண்டால், தொண்டைக்கட்டு, கோழை, சுவையின்மை பாதிப்பு அகலும்.
06. பச்சை மாவிலையை
நெருப்பில் போட்டு,
அதிலிருந்து எழும்
புகையை வாயில்
பிடித்தால், தொண்டைக் கட்டு குணமாகும். (082) (1136)
07.
முருங்கை இலைச் சாற்றுடன் சிறிது சுண்ணாம்பும் தேனும் கலந்து தொண்டையில் பூசினால், தொண்டைக் கட்டு தீரும்.
08. வில்வ இலைப் பொடி அரைத் தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கட்டு குணமாகும். (1585) நீர்க் கோவை தீரும். (1733)
=======================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்
சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து
எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]
{01-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக