மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 7 ஜூலை, 2021

நோய் - எதிர்ப்பாற்றல் பெருக. (To attain Immunity)

 

01.   அதிமதுரம் 35 கிராம், சோம்பு 35 கிராம் சர்க்கரை வேர் 17 கிராம், கொடிவேலிப் பட்டை 17 கிராம் ஆகியவற்றை நசுக்கிப் பொடியாக்கி தினசரி காலை மாலை கால் தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.(754)

 

02.   அறுகம்புல் சாறு தினசரி 50 மி.லி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.(740)

 

03.   ஆலமரத்துப் பட்டையைப் பட்டுப் போல் அரைத்து  வடிகட்டி, சர்க்கரை கலந்து பருகி வந்தால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.(755)

 

04.   இலவங்கப் பட்டைத் தூள் அரைத் தேக்கரண்டி எடுத்து தேஎனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும். (Harish)

 

05.   குங்குமப்பூவை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வந்தால், மசக்கைமயக்கம் நீக்கி, புத்துணர்ச்சி அளித்து, இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். தாய்க்கும் சேய்க்கும்  நோய் எதிர்ப்பு ஆற்றல்  அளிக்கும்.[ கருவுற்ற பெண்கள் மூன்றாம் மாதத்தில் இருந்து இதைச் செய்ய வேண்டும். ]

 

06.   கொடிவேலிப் பட்டை 17 கிராம், அதிமதுரம் 35 கிராம், சோம்பு 35 கிராம், சர்க்கரை வேர் 17 கிராம் எடுத்து இடித்து பொடியாக்கி காலை மாலை கால் தேக்கரண்டி வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகுதியாகும்.(754)

 

07.   நிலவேம்பு இலையைத் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காகக் காய்ச்சி வடிகட்டி அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும்.

 

08.   நிலவேம்பு வேரினை எடுத்து குடிநீர் செய்து ஒரு தம்ளர் வீதம் காலை மாலை தொடர்ந்து 15 நாள் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படும்.

 

09.   நெல்லிக் கனி தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் மிகுதியாகும். உடல் பலமும் அதிகரிக்கும்.(736)

 

10.   பப்பாளிப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.  (811) (1997)

 

11.   பரங்கிக் காய் சாறுடன் இஞ்சிச் சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து, அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். சளித் தொல்லை குறையும்.


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக