01.
அசோகு பூ, மாம்பருப்பு சம அளவு எடுத்து, பொடி செய்து மூன்று சிட்டிகை எடுத்து பாலில் கலந்து உட்கொண்டு வந்தால், சீதபேதி, இரத்தபேதி ஆகியவை குணமாகும் .(091)
02. அத்திப் பால் 15 மி.லி யுடன் வெண்ணெய் சர்க்கரை கலந்து, காலை மாலை கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறு நீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
03. அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவை சமனளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி, அதிலிருந்து 5 கிராம் எடுத்து 50 மி.லி கொதி நீரில் ஊற வைத்து வடிகட்டி, நாள்தோறும் மூன்று வேளைகள் கொடுத்து வந்தால் பெரும்பாடு தீரும். சீதபேதி, இரத்தபேதி ஆகியவையும் குணமாகும்.
04. அரசமரக் கொழுந்து, ஆலமரக் கொழுந்து, அத்தி மரக் கொழுந்து ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி சர்க்கரை
சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி குணமாகும்.(368)
05. அறுகம்புல் ஒரு கைப்பிடியும், கானவாழை சமூலம் ஒரு கைப்பிடியும் எடுத்து மைய அரைத்து, கொட்டைப் பாக்கு
அளவுக்கு எடுத்து பாலில் கலந்து கொடுத்தால் இரத்த பேதி நிற்கும்.(092)
06. ஆடாதொடை இலைச் சாறு 2 தேக்கரண்டி எடுத்து எருமைப் பாலில் கலந்து காலை மாலை கொடுத்து வந்தால் சீதபேதி, இரத்தபேதி குணமாகும்
07. ஆலமரத்தின் துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து கொடுத்து வர இரத்த பேதி நிற்கும்.
08. கற்றாழையின் இளமடலின் சோற்றுடன் சீரகம், கற்கண்டு சேர்த்து இரத்தமும் சீதமும் கலந்த கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.
09. கானவாழை சமூலத்துடன் அருகம்புல் சமனாய் சேர்த்து மைய அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை மாலை பாலில் கொடுக்க இரத்தபேதி நிற்கும்.
10. திருநீற்றுப் பச்சிலை விதைகளைக் கொதி நீரில் ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
(1367) இரத்தக் கழிச்சல் குணமாகும். (1377) சிறு நீர் எரிச்சல் தீரும் ; வெட்டை நோய் தணியும்.
(1388)
11. பிண்ணாக்குக் கீரையை பருப்புடன் சமைத்து நெய்யுடன் சோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் உட்சூடு, வெள்ளை, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை
தீரும் .(093)
12. மாந்தளிர், மாதுளை இலை அரைத்து ஒரு கிராம் எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் இரத்த பேதி, வயிற்றுக் கடுப்பு தீரும்.
(1508)
13. மாம்பருப்பு, அசோகு பூ சம அளவு எடுத்து, பொடி செய்து 3 சிட்டிகை பாலில் கலந்து உட்கொண்டால், சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.
(091)
14. மாம்பருப்புப் பொடி, நெய்யில் வறுத்தது அரை கிராம் எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் இரத்தபேதி, ஆசன எரிவு தீரும். (1515)
15. வாழைப்பூ ஒன்றைத் தீயில் போட்டு அப்படியே சுடவேண்டும். சுட்ட பூக்களை மடலை விலக்கி விட்டு நசுக்கிச் சாறு பிழிய வேண்டும். மூன்று பாலாடை சாறு
எடுத்து அத்துடன் கொஞ்சம் கற்கண்டைத் தூள் செய்து போட்டுக் கலக்கிக் குடிக்க வேண்டும். மூன்று வேளைகள் வீதம் மூன்று நாள்கள் குடித்து வந்தால் இரத்த பேதி குணமாகும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல் பக்கம் 165 & 166)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)20]
{05-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக