மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

வயிறு - உப்பிசம் (Flantulency / Tympanites)

 

01.   ஆடாதொடை இலை, வேரை சம அளவு எடுத்து, மிளகு சேர்த்து, ஊறல் குடி நீர் செய்து கொடுத்தால் உப்பிசம், காய்ச்சல், ஈளை, இருமல், இரைப்பு தணியும்.

 

02.   கேழ்வரகுப் புல் (தாள்) எடுத்து அரிந்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். அத்துடன் சிறிது சீரகப் பொடி, சிறிது மிளகுப் பொடி சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி 3 வேளைகள் அருந்தினால் சுரம் நீங்கும். வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு, வயிற்று உப்புசம் ஆகியவை விலகும்.

 

03.      சீரகத் தூள் கால் தேக்கரண்டி எடுத்து சம அளவு திப்பிலிப் பொடி சேர்த்து அருந்தி வந்தால் செரிமானம் சீராகும். வயிற்று உப்பிசம் குறையும்.

 

04.   சீரகம், கருஞ் சீரகம் இரண்டையும் பொடி செய்து கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, கிராம்பு ஆகியவை சேர்த்து தயிருடன் கலக்கிப் பருகி வந்தால் வயிறு உப்பிசம் தீரும். (700)

 

05.   சோறு வடிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூளையும், சிறிது பனங் கற்கண்டையும் சேர்த்துச்  சூட்டோடு சாப்பிட்டு வந்தால் வயிறு உப்பிசம் நீங்கும். 716)

 

06.      துளசி இலைகளை ஒரு தம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, ஒரு மணி நேரம் கழித்துக் குடித்து வந்தால் நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம், பித்தம் நீங்குகிறது.

 

07.   நிலாவாரை இலைத் தூளை ஒரு தேக்கரண்டி அளவு உணவுக்குப் பின் வெந்நீரில் கலந்து ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்று உப்புசம் தீரும்.

 

08.   மஞ்சள் தூளும் பனங் கற்கண்டும் சிறிது எடுத்து சோறு வடித்த நீரில் போட்டுக் கலக்கி சற்று சூட்டோடு சாப்பிட்டால், வயிற்று உப்பிசம் தீரும்.  (716)

 

09.   முருங்கை இலையைக் கசக்கிச் சாறெடுத்து, சிறிது சூடு காட்டி அரைச்சங்கு அளவுக்கு குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிறு  உப்பிசம் தீரும், மலக்கட்டு  விலகும்.(358)

 

10.   வசம்பைச் சுட்டுத் தூளாக்கி சுக்குப் பொடியுடன் கலந்து வயிற்றின் மேல் பூசினால் உப்புசம் மாறும்.

 

11.   வெந்நீர் அரைத் தம்ளர் எடுத்து அரைத் தேக்கரண்டி வெள்ளைப் பூண்டுச் சாறினைக் கலக்க வேண்டும். சிறிதளவு உப்பையும் அத்துடன் கலக்க வேண்டும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பின்பு சோறு சாப்பிடாமல் நீராகாரம் அல்லது நீர்த்த க்ஞ்சி சாப்பிடலாம். மாலையிலும் 5 மணி வாக்கில் வெந்நீர் + பூண்டுச் சாறு கலவை மருந்தைச் சாப்பிட வேண்டும். இரண்டு நாட்கள் இம்மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏழு நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் முடிந்த அளவு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வெந்நீர் அருந்த வேண்டும்.  இவ்வாறு செய்தால் வயிறு உப்பிசம் தீரும். செரிமானம் மிகும். (ஆதாரம் : “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )20]

{05-08-2021}

==========================================================

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக