மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

வயிறு - செரிமான ஆற்றல் (Digestion Power)

 

01.   இலந்தைப் பழம் உணவு செரிமான சக்தியை மிகுதிப்படுத்தும். (628)

 

02.   இலவங்கப் பட்டைத் தூள் அரைத் தேக்கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து உணவுக்கு முன் உள்ளுக்குச் சாப்பிட்டால், செரிமான ஆற்றல் மிகுதியாகும். (Harish)

 

03.   ஏலக்காய், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து வறுத்து பொடித்து, ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து உட்கொண்டால் செரிமானம் எளிதாகும்.

 

04.   ஏலம், சீரகம், சோம்புப் பொடிகளைக் கலந்து 5 கிராம் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால், பசி, செரிமானம் தூண்டப்படும்.

 

05.   ஓமம் ஒரு சிட்டிகை தினமும் உணவு சாப்பிட்டதும் வாயில் போட்டு மென்றால், செரிமானம் ஏற்படும்.

 

06.   கடுகை 15 நிமிடம் ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து உணவு உண்பதற்கு முன் குடித்தால் நன்கு செரிமானம் ஏற்படும்.

 

07.   களாக் காய் ஊறு காய் சாப்பிட்டு வந்தால் உணவு செரிமான சக்தி மிகுதியாகும்.(291)

 

08.   கீரைத்தண்டினை உணவில் சேர்த்து வந்தால் செரிமான சக்தி மிகுதியாகும்.(1061)

 

09.   கொத்துமல்லி விதை சிறிதளவு, சுக்கு, பனை வெல்லம் சேர்த்து வாரம் ஒரு முறை கசாயம் வைத்து அருந்தினால் செரிமானம் சீராகும். மலச்சிக்கல் ஏற்படாது.

 

10.   சதகுப்பை விதையைக் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி, குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் செரிமான சக்தி பெருகும்.(693)

 

11.      சீரகத் தூள் கால் தேக்கரண்டி எடுத்து  சம அளவு திப்பிலிப் பொடி சேர்த்து அருந்தி வந்தால் செரிமானம் சீராகும். வயிற்று உப்பிசம் குறையும்.

 

12.   தமரத்தம் பழம் சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகமாகும்.(809) (1994).

 

13.   நாரத்தங்காய் ஊறுகாய் மலச் சிக்கலைப் போக்கி செரிமான சக்தியைச் கொடுக்கும்.  (385) (1996)

 

14.   பெருஞ்சீரகப் பொடி, வல்லாரைப் பொடி இரண்டும் தலா அரைத் தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் செரிமான ஆற்றல் பெருகும்.  (642)

 

15.   வல்லரைப் பொடி, சோம்புப் பொடி இரண்டிலும் அரையரைக் கரண்டி வீதம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி மிகுதியாகும்.(642)

 

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )21]

{06-08-2021}

==========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக