01. ஆளி விதைகளை அரைத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி, அஜீரணம் ஆகியவை குணமாகும்.(718)
02. இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மூன்றையும் ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி பருகினால் செரியாமை நீங்கும்.(666)
03. ஏலக்காய் நான்கு எடுத்து ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து பருகினால் செரியாமை சரியாகும்.
04. ஏலக்காய்ப் பொடியை சிறிது எடுத்துத் தேனில் குழைத்து, மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் ஆகியவை குணமாகும்.(671)
05. ஓமத்தை ஒரு சிட்டிகை தினமும் உணவு சாப்பிட்டதும் வாயில் போட்டு மென்றால், செரிமானம் ஏற்படும்.
06. ஓமவல்லி இலை, துளசி
இலை, புதினா
இலை, ஓமம்
ஆகியவற்றை எடுத்து சற்று இடித்து, தண்ணீர் சேர்த்து
கசாயம் செய்து 60 – 100 மி.லி
அளவுக்கு பருகினால் வயிற்று வலி, செரியாமை நீங்கும்.
07. ஓமவல்லி இலை, பூண்டு, சீரகம், பெருங்காயம், மஞ்சள்
தூள் சேர்த்து ரசமாகச் செய்து உணவுடன் உட்கொண்டால் செரியாமை நீங்கும்.
08. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி, அதைக் குடித்து வந்தால் அஜீரணம் குணமாகும்.(666)
09. குப்பைமேனி இலையைக் காய வைத்துப் பொடி செய்து மாலை அரைத் தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், வயிற்று வலி, வாயுத் தொல்லை ஆகியவை தீரும். (652)
10. கோரைக் கிழங்கை நன்றாகக் கழுவி நீர் விட்டுக் காய்ச்சி இரண்டு நாட்கள் சிறிதளவு குடித்துவந்தால் செரியாமை கட்டுப்படும்.
11. சதகுப்பையை ஐந்து கிராம் எடுத்து 100 மி.லி நீரிலிட்டு, 25 மி.லி யாக வரும் வரைக் காய்ச்சி, தினமும் இரு வேளைசர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் செரியாமை, வயிறு உப்புசம் தீரும்.
12. சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெயில் வறுத்து, சிறிதளவு உப்பு, கறிவேப்பிலை, சீரகம், மிளகு சேர்த்து
பொடித்து உணவுடன் உண்டு வந்தால் மந்தம், செரியாமை தீரும்.
13. தங்கத்தைத் தீயில் இட்டு, பின் ஒரு தம்ளர் தண்ணீரில் போட வேண்டும். இவ்வாறு நான்கைந்து முறை செய்ய வேண்டும். பின்பு இந்த நீரைப் பருகினால் அஜீரணம் குணமாகும்.
(713)
14. தர்பூசணிப் பழச் சதைப் பகுதியை நன்கு அரைத்து, வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்துத் தருவதால் செரியாமை குணமாகும்.
15. தான்றிக் காய், அதிமதுரம், திப்பிலி
சேர்த்துக் கசாயம் செய்து 60 மி.லி
வரை குடித்தால் இருமல் தீரும்; செரியாமை குணமாகும். (Harish)
16. துளசிச் சாறு 10 மி.லி எடுத்து சிறிதளவு உப்பு கலந்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் சரியாகும்.(708)
17. நமது கையின் நடுவிரலின் மேற்பகுதியில் 10 – 15 நிமிடம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தால் செரியாமை நீங்கிவிடும். (இது ரெய்கி மருத்துவம்)
18. நிலவேம்பு சமூலம் 50 கிராம், வெந்நீர் 1 லிட்டர், கிராம்புத்தூள் அல்லது
பொடித்த ஏலம் 5 கிராம் எடை எடுத்து
ஒன்று கூட்டி 6 மணி நேரம் ஊறவைத்து, 30 மி.லி. வீதம் தினசரி 2 – 3 முறை கொடுத்துவர முறைச்சுரம், குளிர்ச்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை இவை போகும்.
19. நொச்சி, நுணா, வேம்பு, பொடுதலை ஆகியவை வகைக்கு 30 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு, மிளகு நான்கு,
சீரகம் ஒரு தேக்கரண்டி, சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி 30 மி.லி. வீதம் 3 நாட்கள் ஒவ்வொரு வேளை மட்டும் கொடுக்க செரியாமை தீரும்.
20. பிரண்டைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரியாமையைப் போக்கிப் பசியைத் தூண்டும்.(297)
21. புளியந் தளிரைத் துவையலாக்கி உண்ண, பித்தத்தைச் சமனாக்கி வயிற்று மந்தம் தீரும்.
22. மஞ்சள் துண்டினை சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஊறவைத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து ஒரு தேக்கரண்டி தேன், வெந்நீர், பால், இவற்றில் ஏதேனும் ஒன்றில் கொடுக்க, செரியாமை (அஜீரணம்) தீரும்.
23. மாவிலங்க இலையை குடிநீரிட்டுக் கொடுக்க, சுரம், செரியாமை போகும். இலையை அரைத்துப்
பற்றுப் போட்டால் வீக்கம் கரையும்.
=====================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)21]
{06-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக