மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

வயிறு - கடுப்பு (Gripes)

 

 

01.   அத்திப் பிஞ்சு, வேலம் பிஞ்சு, மாம்பட்டை, சிறு செருப்படை ஆகியவற்றை சமனெடை எடுத்து வாழைப் பூச் சாற்றில் குடிநீரிட்டுக் கொடுத்தால் வயிற்றுக் கடுப்பு, சீதக் கழிச்சல் முதலியன போகும்.

 

02.   அரச மரக் கொழுந்தினை எடுத்து மோர் விட்டு அரைத்து, மோரில் கலக்கிக் குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.(684)

 

03.   இலந்தைப் பட்டைக் கழாயம் வயிற்றுக் கடுப்பினைக் குணமாக்கும்.(628)

 

04.   கல்யாண முருங்கை இலைச்சாறு 15 மி.லி. ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

 

05.   கல்யாண முருங்கைமரப்பட்டை 10 கிராம் எடுத்து  100 மி.லி. பாலில் ஊறவைத்து ஒருமணிக்கு 20 மி.லி. வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு கூட குணமாகும்.

 

06.   காய்ந்த நெல்லிக் காயை வாணலியில் இட்டு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துச்  சாப்பிட்டு வந்தால், வயிற்றுக் கடுப்பு குணமாகும்.(697)

 

07.   கேழ்வரகுப் புல் (தாள்) எடுத்து அரிந்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். அத்துடன் சிறிது சீரகப் பொடி, சிறிது மிளகுப் பொடி சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி 3 வேளைகள் அருந்தினால் சுரம் நீங்கும். வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு, வயிற்று உப்புசம் ஆகியவை விலகும்.

 

08.   திருநீற்றுப் பச்சிலை விதைகளைக் கொதி நீரில் ஊற வைத்துச்  சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.  (1367)  இரத்தக் கழிச்சல் குணமாகும். (1377)  சிறு நீர் எரிச்சல் தீரும் ; வெட்டை நோய் தணியும்.  (1388)

 

09.   தொட்டாற் சுருங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.

 

10.   தொட்டாற்சிணுங்கி இலையை வெண்ணெய் போல அரைத்து தயிருடன்  கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.(715)

 

11.   நெல்லிகாய் காய்ந்த நிலையில் (நெல்லி முள்ளி) உள்ளதை எடுத்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து, முட்டையின் வெள்ளைக் கருவைச்  சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு தீரும்.  (697)

 

12.   மாதுளம் பூவைக் கழாயம் செய்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.(651) (1142) (1177)

 

13.   மாதுளை இலை, மாந்தளிர் சேர்த்து அரைத்து ஒரு கிராம் எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் இரத்தபேதி, வயிற்றுக் கடுப்பு நீங்கும்.  (1508)

 

14.   மாந்தளிர், மாதுளை இலை அரைத்து ஒரு கிராம் எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால்  இரத்த பேதி, வயிற்றுக் கடுப்பு தீரும்.  (1508)

 

15.   மாமரத்தின் வேர்ப் பட்டையை எடுத்து சிதைத்து கஷாயம் செய்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு, பெரும்பாடு ஆகியவை தீரும்.  (1516)

 

16.   வெந்தயத்தை ஊறவைத்து, சிறிதளவு ஏலக்காய் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

 

17.   வெந்தயத்தை காலையில் எழுந்ததும் வாயில் போட்டு தயிரைக் குடித்து வந்தால், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.(717)

 

18.   வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு ஆகியவை தலா 5 கிராம் எடுத்து, நீர் விட்டு  அரைத்து வடிகட்டி நீரை மட்டும்  மூன்று வேளைகள் ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்

 

19.   வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு ஆகியவை தலா 5 கிராம் எடுத்து, நீர் விட்டு  அரைத்து வடிகட்டி நீரை மட்டும்  மூன்று வேளைகள் ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்.

 

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )21]

{06-08-2021}

==========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக