01. சோற்றுக் கற்றாழை மடலின் மேல் தோலைச் சீவிவிட்டு, உள்ளே இருக்கும் சோறை மட்டும் எடுத்து இரண்டு விரல் பருமனில் மூன்று துண்டுகளை வெட்டிக் கொள்ள வேண்டும். அத்துண்டுகளின் மேல் அரைப் பிடி சீரகத்தைத் தூள் செய்து தூவி, பல்லில் படாமல் வாயிலிட்டு விழுங்க வேண்டும். இவ்வாறு மூன்று நாள்கள் மட்டும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும். எரிச்சல் நீங்கும்.உணவில் புளி, காரம் நீக்கி, அரை உப்பு மட்டும் சேர்க்கலாம்.
02. வெள்ளரி விதையின் உட்பருப்பைப் பொடித்து தினமும் அரைத் தேக்கரண்டி அளவுக்கு நீரில் கலந்து அருந்தினால் வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, வயிற்றெரிச்சல் தீரும்.
=====================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)21]
{06-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக