01. அதிமதுரம் ஒரு துண்டு எடுத்து நசுக்கி, தண்ணீரில் போட்டுக்
கொதிக்க வைத்துக் கசாயம் செய்து அருந்தி வந்தால் வயிற்றுப் புண் ஆறும்.(1671)
02. அம்மான் பச்சரிசி இலையைத் துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்து பகல் உணவுடன் 7 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். Iஇதனால் வயிற்றுப் புண் குணமாகும். (650)
03.
கருங்காலி வேரை எடுத்து சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.
04. கழற்சிக்காய்ப் பருப்புடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து அரைத்து மோருடன் கலந்து குடிக்கலாம். வயிற்றுவலி, வயிற்றுப் புண் அகலும்.
05. கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து (அதாவது சோற்றுப் பகுதியை) சற்றே அலசிவிட்டு மோரில் உண்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
06. கொய்யாப் பழம் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும்.(1261)(1868). கொய்யாப் பழம் வயிற்றுப் புண்களை ஆற்றும்.(1294)
07. கொள்ளை வேகவைத்து மசித்து அதனுடன் நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
08.
செண்பகப்பூ முப்பது ஆய்ந்து எடுத்து இரவு படுக்கும் முன்பு ஒரு புதுச் சட்டியில் போட்டு, இரண்டு கோப்பைத் தண்ணீர் விட்டு மூடி வைத்து, இறுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு கோப்பையும் மாலையில் ஒரு கோப்பையுமாக தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள இரணம் (வயிற்றுப் புண்) கூட ஆறிவிடும்.
09. செம்பருத்திப் பூக்களை காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை
மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண்
ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.
10. செம்பருத்திப் பூச் சாறு பூசனிக் காய்ச் சாறு இரண்டும் சேர்த்து சாப்பிட்டு
வந்தால் நீர்த்தாரை எரிச்சல், வயிற்றுப் புண், சீதபேதி ஆகியவை தீரும். (1498)
11. தயிர் சாத்துடன் சிறிது சுக்குப் பொடி கலந்து சாப்பிட்டு வாருங்கள். வயிற்றுப் புண் குணமாகும்.
12. திராட்சைப் பழச் சாறு தினசரி ஒரு தம்ளர் சாப்பிட்டு வந்தால் குடற் புண் (அல்சர்) குணமாகும். (321) (664) (1146)
13. தொட்டாற் சுருங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்
14. நாய் வேளை இலையைப் பறித்துச் சமைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும். வாயுத் தொல்லை, பசியின்மை, உதிரப் போக்கு ஆகியவையும் குணமாகும்.(678),
15. பூசணிச் சாறு, செம்பருத்திப் பூச்சாறு, இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நீர்த் தாரை எரிச்சல், வயிற்றுப் புண், சீதபேதி ஆகியவை குணமாகும். (1498) சொட்டு மூத்திரம் குணமாகும். (1509)
16. பொடுதலை இலையுடன் மிளகு, சீரகம், சிறிது உப்பு ஆகியவை சேர்த்து நெய்யில் வதக்கி, உண்டு வந்தால் இரண்டொரு நாளில் வயிற்றுப் புண் குணமாகும்.(726)
17. மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வறுத்துக் கரியாக்கிப் பொடி செய்து அந்தப் பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து அருந்தி வந்தால் குடல் புண் குணமாகும். (685)
18.
19. மணித் தக்காளிக் கீரையை அடிக்கடிச் சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலிலிருந்து விடு படலாம். உடல் வெப்பமும் தணியும். இருமல், இளைப்பு, வயிற்றுப் போக்கு கட்டுப்படும். வயிற்றுப் புண் ஆறும்.
20. மாதுளம் பழச் சாறு தினமும் ஒரு தம்ளர் அருந்தி வர வயிற்றுப் புண் குணமாகும். இதனால் இரைப்பை, குடல் சம்பந்தமான நோய்கள் அறவே நீங்கும்.(648)
21. மாதுளம் பழச் சாறு தினமும் ஒரு தம்ளர் அருந்தி வர வேண்டும். இரைப்பை புண் குணமாகும். இதனால் இரைப்பை, குடல் சம்பந்தமான நோய்கள் அறவே நீங்கும்.(648)
22. மாவிலங்கப் பட்டைக் கசாயம் காலை, மாலை சாப்பிட்டு
வந்தால் சிறுநீரகத்தில் கல்லடைப்பு நீங்கும். (1541)
வயிற்றுப் புண்
குணமாகும். (1518) கண்டமாலை புண் குணமாகும். (1593)
விஷகடி
தீரும்.
(1608)
23. முருங்கை இலையைச் சமைத்து உண்பதால், வயிற்றுப் புண்கள் ஆறும். இரத்தத்தைச் சுத்திகரிக்கும். கை, கால்களில் ஏற்படும் வீக்கம் கரையும். உடல் வெப்பத்தைக் குறைக்கும்.
24. வாழைப் பூவை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சமைத்து உண்பதால் இரத்தம் தூய்மையாகும்; இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் குறையும்; வயிற்றில் உள்ள புண்களை
ஆற்றும்.
25. வாழைப் பூவை வாரம் ஒருமுறை உணவுடன் சேர்த்து வந்தால், வயிற்றுப் புண் சரியாகும்.(701)
26. வில்வ இலைகளை மாலை வேளையில் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். மறு நாள் காலையில் அந்த நீரை எடுத்துப் பருகி வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.
(1714)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)21]
{06-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக