01. ஆதொண்டை இலையை நெய்யில் வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், பசியின்மை, சுவையின்மை நீங்கும்.(271)
02. இலந்தை வேர் – பசியைத் தூண்டக் கூடியது. இலந்தைப் பழம் – செரிமான சக்தியைப் பெருக்கக் கூடியது.(628)
03. சதகுப்பை சூரணத்தை ஒரு கிராம் எடுத்து சிறிதளவு நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால், பசியின்மை கட்டுப்படும்.
04. சதகுப்பை, இஞ்சி, கிராம்பு, சீரகம், திப்பிலி, மிளகு ஆகியவற்றை நன்றாக உலர்த்தி, இடித்து சிறிதளவு துளசிச் சாறு கலந்து உட்கொண்டால் பசியின்மை குறையும்.
05. சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளைஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம் வறுத்து இடித்த சூரணம் காலை மாலை 2 சிட்டிகை மோரில் சாப்பிட்டு வந்தால் பேதி, மூலம், பசியின்மை, மார்புச்சளி
தீரும்.
06. நாய் வேளை இலையைப் பறித்துச் சமைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும். வாயுத் தொல்லை, பசியின்மை, உதிரப் போக்கு ஆகியவையும் குணமாகும்.(678),
07. நாய்வேளை விதைகளைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாத நோய், பசியின்மை ஆகியவை தீரும் (1322)
08. நித்திய கல்யாணிப் பூ ஐந்து
அல்லது ஆறு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி, கால் லிட்டராக்கி
ஒரு நாளைக்கு நான்கு வேளை கொடுக்க , (அதி மூத்திரம்) அடிக்கடி சிறுநீர்
போதல், (அதி தாகம்) அடிக்கடி தாகம்
எடுத்தல், உடல் பலவீனம், மிகு பசி (எப்போதும்
பசி உணர்வு), பசியின்மை ஆகியவை தீரும்.
09. பிரண்டைத் துண்டுகளை [முற்றியது] நார் நீக்கி, மோரில் உப்பு கலந்து ஊற வைத்து நன்கு உலர்த்தி எடுத்து வற்றலாக எடுத்து வைத்துக் கொண்டு எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் சுவையின்மை, பசியின்மை தீரும்.
10. முள்ளிக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பசியின்மை மாறி நன்கு பசி உண்டாகும். (270)
11. விளாமரக் கொழுந்து பறித்து வந்து அரைத்து ஒரு கிராம் எடுத்து பாலில் கலந்து அருந்தினால் பசியின்மை தீரும். (1645) இளைப்பு தீரும்.
(1601)
12. வேப்பம் பூ ( உலர்ந்தது ) ஐந்து
கிராம் எடுத்து 50 மி.லி
குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து, வடிக்கட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்
13. வேப்பம் பூ வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு
மிக நல்லது. வேப்பம் பூவை மென்று தின்பார்கள்.
=====================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)21]
{06-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக