01. ஆற்றுத் தும்மட்டிக் காயை நறுக்கி, நசுக்கி, தலையில்
தேய்த்து வந்தால் தலையில் காணப்படும் புழு வெட்டு நீங்கி முடி வளரும். (934)
02. ஊமத்தம் பிஞ்சை உமிழ் நீரில் அரைத்து புழு வெட்டு உள்ள இடத்தில் தடவி வந்தால் புழு வெட்டினால் முடி உதிர்வது நிற்கும்.(396)
03. ஊமத்தைப் பிஞ்சை
அவரவர் உமிழ் நீரில் மைய அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும். புழு
இறந்து, முடி வளரும்.
04. நவச்சாரத்தைத் தேனில் கலந்து தடவினால் புழு வெட்டு முடிஉதிர்தல் நிற்கும். (925) (1192) (1942)
05. பவளமல்லி விதையின் விழுதை புழு வெட்டு உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால், முடி கொட்டிய இடத்தில் மீண்டும் முடி முளைக்கும்.
06. மாதுளம் பழச் சாறை புழு வெட்டு உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், அந்த இடங்களில் முடி முளைக்கும்
(1555)
07. மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு
வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.[ சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். ]
08. வேப்பங் கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து அரைத்து ஒரு சுண்டைக்காய் அளவு தினசரி சாப்பிட்டு வந்தால் புழுவெட்டு அகலும்.(926)
09. வேப்பங்கொழுந்து, முதிர்ச்சியான இலை, ஆகிய
இவ்விரண்டையும் இடித்து, அப்பொடியின் அளவிற்கு
அரைப்பங்கு ஓமமும் உப்பும் சேர்த்துப் பொடித்து, புசிக்கத் தொடங்கின், அதனால், கண்ணிலிருக்கும் படல மறைப்பு, காமாலை, மாலைக்கண், புழு வெட்டு முதலிய நோய்கள் அகலும்.
=====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள்
எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)19]
{04-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக