01. ஆடாதொடை இலைகளை நெய்யில் வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பசி உண்டாகும்.(1731)
02. இலந்தை வேருக்குப் பசியைத் தூண்டக் கூடிய சக்தி உண்டு. (628)
03. இலந்தைப் பழம் இரத்தத்தைச் சுத்தப் படுத்தி சுறு சுறுப்பாக்கும். பசியைத் தூண்டும் (532)
04. கறிவேப்பிலை, மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து வெந்நீர் ஊற்றி அரைத்து குழந்தைகளுக்குக் குளிப்பாட்டியவுடன் கொடுக்கவும். மந்தம் குறையும். பசியைத் தூண்டும். (274)
05. சீரகத்தை வறுத்து
கொதிக்கும் நீரில்
போட்டு, தேவைக்கு ஏற்ப
பால் கலந்து பருகி வந்தால், நன்கு பசி ஏற்படும்.
06. சீரகத்தைப் பொன் வறுவலாக வறுத்து, பொடி செய்து, சூரணமாகப் பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு மிகுதிப்படும்.(643)
07. சுக்கு [ தோல் நீக்கி இடித்தது ], மிளகு, சதகுப்பையை கொஞ்சம் எடுத்து, மிதமாக வறுத்து, இடித்து, சிறிதளவு ஏலக்காய் சேர்த்து நன்றாகப் பொடித்து, தென் கலந்து சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும்.
08. சுண்ணாம்பு நீரில் ஊறவைத்துக் காய வைத்த பிரண்டைத் துண்டுகளை எடுத்து ஒன்று அல்லது இரண்டு துண்டுகளைச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
09. தாழம்பூவுக்கு பசியைப் பெருக்கும் குணமுண்டு. பசித் தீயை உண்டாக்கும்
10. பிரண்டையைத் துவையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் பசி உணர்வு தூண்டப்படும்.(290) (1143)
11. பிரண்டையை நெய் விட்டு வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பசி எடுக்கும்; மூலநோய் வராது; இரத்தக் கழிச்சல் தீரும்.
(360) (1143)
12. முடக்கற்றான் கீரையை இரசம் வைத்து உண்டால் சிறுநீர் பெருக்கும், மலமிளக்கும், பசியைத் தூண்டும், வாதத்தை அடக்கும், உடலை வலிமைப்படுத்தும்.
13. முள்ளிக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டால், பசி உணர்வு தூண்டப்பெறும்.(302)
14. விளா மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து கசாயம் வைத்துச் சாப்பிட்டால் வாயு நீங்கி நல்ல பசி எடுக்கும்.
(669)
15. வெள்ளரிக் காய் சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும். நீர்க் கடுப்பு குணமாகும். (1244)
16. வேப்பம் பட்டை, கிராம்பு, நிலவேம்பு மூன்றையும் சம அளவு எடுத்து 200
மி.லி நீரில் இட்டுக் கொதிக்க வைத்து , அந்த நீரைச் சாப்பிட்டு வந்தால், பசி உண்டாகும்.(273)
=====================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)21]
{06-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக