01. உத்தாமணிச் சாறு ஒரு சங்கு அளவு எடுத்து, சற்று கொதிக்க
வைத்து உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.(659) (1176). இத்துடன் வசம்புச் சுட்ட தூள் சிறிதளவு சேர்த்துக் கொடுத்தால் வயிற்று மந்தம் விலகும்.(659)
02. கறிவேப்பிலை, மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து, சுடுநீர் ஊற்றி அரைத்து, குழந்தைகளுக்குக் குளிப்பாட்டியவுடன் கொடுக்கவும். மந்தம் குறையும். பசியைத் தூண்டும்.(274)
03. சதகுப்பை இலைகளை நன்றாக அரைத்து 10 கிராம் எடுத்து, 150 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி மூன்று வேளையாகக் குடித்து வந்தால் பசிமந்தம், மூக்கில் நீர் கொட்டுவது சரியாகும்.
04. சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை
இள வறுப்பாய் வறுத்து, உப்பு சேர்த்துச்
சூரணித்து (பொடியாக்கி) உணவில்
கலந்து சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை
தீரும்.
05. சுண்டைகாயை சிற்றாமணக்கு எண்ணெயில் வறுத்து,சிறிதளவு உப்பு, கறிவேப்பிலை, சீரகம், மிளகு சேர்த்து பொடித்து உணவுடன் உண்டு வந்தால் மந்தம், செரியாமை தீரும்.
06. முன்னைக் கீரையைப் பருப்புடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பசி மந்தம், மயக்கம் தீரும்.(268)
=====================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)21]
{06-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக