மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

விஷம் - முறிவு மருந்து ( Anti Toxic Herbal Medicine)

 

01.   அறுகம் புல் வேர், மிளகு, சீரகம், அதிமதுரம், சிற்றரத்தை, மாதுளம்பூ சேர்த்துக் கழாயம் செய்து கொடுத்தால் விஷம் விலகும்.(877)

 

02.   ஆடு தீண்டாப்பாளை   இலையை எடுத்து அரைத்து வெந்நீரில் கலக்கிக் கொடுத்தால் விஷ முறிவு ஏற்படும்.(879)

 

03.   கருவேல மரக் கொழுந்தினை எடுத்து  மை போல் அரைத்து கொட்டைப் பாக்கு அளவு ஒரு தம்ளர் தயிருடன் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் முறியும்.(874)

 

04.   கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும்,   குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவரின் லோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும் .மேலும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்

 

05.   கிரந்திநாயகம் இலையை மென்று தின்பதுடன், அதை அரைத்துக் கடிவாயிலும் வைத்துக் கட்டினாம் விஷம் முறியும். (888)

 

06.   குப்பைமேனி இலையை அரைத்து சிறிது சுண்ணாம்பு கலந்து கடிவாயில் தடவினால் விஷம் முறியும். இது பொதுவான விஷகடி மருந்தாகும்.(892)

 

07.   சிறியாநங்கை  இலையைத் தொடர்ந்து சாப்பிட்டால் விஷம் முறியும் தன்மையை உடல் பெறும்.(895)

 

08.   சிறுகுறிஞ்சான் வேரை எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி, குடிநீர் செய்து அந்தக் குடிநீரில் 50 – 60 மி.லி எடுத்து உள்ளுக்குக் கொடுத்தால் பாம்பு நஞ்சு மாறும்.

 

09.   சின்னி இலைகளை மென்று தின்றால் விஷ கடியினால் ஏற்படும் வேதனை குறையும். விஷ முறிவு ஏற்படும்.(865)

 

10.   மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.

 

11.   வசம்பை அரைத்து உடனேயே இரண்டு மூன்று தேக்கரண்டி விஷம் அருந்தியவர்களுக்கு கொடுத்தால் நஞ்சு வெளியே வந்து விடும்.

 

12.   விளாம்பழத்தை ஓட்டுடன் அரைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் மருந்து விஷம் முறியும்.(902)

 

13.   வெண்கடுகு முடக்கு வாத நோயைக்  கட்டுப்படுத்தும். விஷம் உட்கொண்டவர்களுக்கு, வெண்கடுகை நீரில் ஊற வைத்து நெல்லிக்காய் அளவு அரைத்துக் கொடுத்தால், வாந்தியை உண்டாக்கி விஷத்தை வெளியேற்றும்.

 ===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)20]

{05-09-2021}

==========================================================================

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக