மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

வீக்கம் - அடிப்பட்ட வீக்கம் (Contusion)

 

01.   கரும் பவளத்தை நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன்  சேர்த்து அரைத்து, அடிபட்ட வீக்கம் மீது தடவி வந்தால்  வீக்கம் சரியாகிவிடும்.(578)

 

02.   காய்ந்த மஞ்சளைத்  தட்டிப் போட்டு  நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால், தலையில் அடிபட்ட காயம், உட்காயம் குணமாகும்.(576)

 

03.   குன்றிமணி விதையைத் தனியாகவோ, மற்ற மருந்துகளுடனோ சேர்த்து அரைத்து, அடிபட்ட வீக்கம், வலி, கீல்வாயு, பக்க வலி, முடியுதிரல் முதலியவைகளுக்குத் தரலாம்.

 

04.   சுதி செடி இலைகளை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அடிபட்ட வீக்கத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால், விரைவில் குணமாகும்.(575)

 

05.   தவசி முருங்கை இலையை வதக்கிக் அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு கட்ட, உடன் வேதனை குறைந்து குணமாகும்.

 

06.   தவசி முருங்கை இலையை வதக்கிக் கட்ட, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு உடன் வேதனை குறைந்து குணமாகும்.

 

07.   நத்தைச் சூரி இலையை வதக்கி அடிபட்ட வீக்கம், காயங்களுக்குக் கட்டி வந்தால் வேதனை குறைந்து குணமாகும்.   (1383)

 

08.   நாமக் கட்டியை உமிழ்நீரில் குழைத்துத் தடவி வந்தால் அடிபட்ட வீக்கம் குறையும். (577) (1919)

 

09.   நுணா இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றடம் கொடுப்பதுடன், வீக்கத்தின் மேல் வைத்துக் கட்டி வந்தால், அடிபட்ட காயம் குணமாகும்.  வலியும்தீரும். (1425)

 

10.   பிரண்டைச் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பற்றுப் போட்டால், சதைப் பிறழ்ச்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு வீக்கம், எலும்பு முறிவு ஆகியவை தீரும்.

 

11.   பிரண்டைத் துண்டுகளைச் நெருப்பில் வாட்டி எடுத்து சாறு பிழிந்து, அத்துடன் மஞ்சள் தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் குழம்புப் பதத்தில் கிளறி , அடிபட்ட வீக்கம், சதைப் பிடிப்பு, சுளுக்கு, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குப் பற்றுப்போட நல்ல பலன்கிடைக்கும்.

 

12.   மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒற்றமிட்டு வந்தால்  பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

 

13.   மூசாம்பரம் என்னும் கரியபோளம் அடிபட்ட வீக்கத்திற்கு நல்ல மருந்து. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அதில் இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி சுக்குப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளற வேண்டும். பின்பு, நீரில் கரைத்து வைத்த கரியபோளக் கரைசலை அத்துடன் சேர்த்துக் கிளறி, இறக்கி, இளஞ் சூட்டில் அடிபட்ட வீக்கத்தின் மேல் பற்றுப் போட்டு வந்தால், வீக்கம் சரியாகும்.

 ===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)20]

{05-09-2021}

==========================================================================

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக