மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

வெட்டை (Blenorrhagia)

 

01.   அதிமதுரம், சிற்றரத்தை, மாதுளம் பூ, அறுகம்புல், மிளகு, சீரகம் அனைத்தையும் அளவோடு போட்டு கசாயம் வைத்துச்  சாப்பிட்டு வந்தால், வெட்டை நோய் குணமாகும்.(943)

 

02.   அறுகம்புல்லின் வேரெடுத்து கணுவை நீக்கிவிட்டு 10 கிராம் எடுத்து, வெண்மிளகு 2 கிராம் சேர்த்துக் குடிநீரில் இட்டு வடித்து, அதில் 2 கிராம் வெண்ணெய் கூட்டி உட்கொள்ள, மருந்தின் தீங்கு, இரச வேக்காடு, மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.

 

03.   கொன்றைப் பூவை, தனியாகவோ, கொழுந்துடன் சேர்த்தோ அரைத்து பாலில் கலக்கி உண்டால் வெள்ளை, வெட்டை, பாண்டு, காமாலை குணமாகும்.

 

04.   சிற்றரத்தை, அறுகம்புல், மிளகு, சீரகம், அதிமதுரம், மாதுளம்பூ ஆகியவற்றை எடுத்து நீரில் இட்டுக் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெட்டை நோய் குணமாகும்.(943)

 

05.   செம்பருத்தி மலரை பெண்கள் உண்டுவந்தால் வெள்ளை ,வெட்டை இரத்தக்குறைவு, பலவீனம் ,மூட்டுவலி ,இடுப்புவலி ,மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதுடன் கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.

 

06.   செம்பருத்திப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்

 

07.   திருநீற்றுப் பச்சிலைச் சாற்றுடன் சம அளவு பால் கலந்து காலை, மாலை என இரு வேளை 100 மி.லி.வீதம் அருந்தி வந்தால் வெட்டை நோய்கள், மேக சம்பந்தமான நோய்கள், பீனிசம், நாட்பட்ட கழிச்சல், உள் மூலம், சிறுநீரக சம்பந்தமான நோய்கள் முதலியவை குணமாகும்.

 

08.   திருநீற்றுப் பச்சிலை விதைகளைக் கொதி நீரில் ஊற வைத்துச்  சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.  (1367)  இரத்தக் கழிச்சல் குணமாகும். (1377)  சிறு நீர் எரிச்சல் தீரும் ; வெட்டை நோய் தணியும்.  (1388)

 

09.   பொடுதலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து, ஒரு கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் கலக்கிக் உள்ளுக்குக் கொடுத்து வந்தால் வெள்ளை படுதல், வெட்டைச் சூடு ஆகியவை தீரும். (1503)  

 

10.   மாதுளம்பூ, அறுகம்புல், மிளகு, சீரகம், அதிமதுரம், சிற்றரத்தை சேர்த்துக் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால், வெட்டை நோய் குணமாகும்.  (943)

 

11.   வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்துஅதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு காய்ச்சி அரை லிட்டராகச் சுண்டியபின் அதனைவடிகட்டி அதனுடன்அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்கு காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதில் 30 மி.லி அளவு எடுத்து அதை 100 மி.லி பசும்பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உடல் வெப்பம் தணியும். இரத்தக் கொதிப்பும், நீரிழிவு நோயும் கட்டுப்படும். வெள்ளை நோய், மேகவெட்டை குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்.

 

 ===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)20]

{05-09-2021}

==========================================================================

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக