மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 செப்டம்பர், 2021

வலிப்பு - காக்கா வலிப்பு (Epilepsy)

 

01.   அக்கராகார வேரினை சுத்தம் செய்து உலர்த்தி நன்கு இடித்துத் தூளாக்கித் துணியால் சலித்து எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தத் தூளை மூக்கில் வைத்து உறிந்தால் காக்கை வலிப்பால் உண்டாகும் நரம்புப் பிடிப்பு குணமாகும்.

 

02.   ஆடுதின்னாப் பாளை காக்கை வலிப்புக்கு மிகச் சிறந்த மருந்து.காலையில் வெறும் வயிற்றில் இந்த மருந்தைச் சாப்பிட வேண்டும். இரண்டு கைப்பிடி ஆடு தின்னாப்பாளை இலைகளை எடுத்து இரண்டு பூண்டுப் பற்களும் சிறிது உப்பும் சேர்த்து கசக்கிச் சாறு பிழிய வேண்டும். அரைத் தம்ளர் அளவுக்குச் சாறு தயாரித்து வலிப்பு நோய் உள்ளவர்களுக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.  இம்மாதிரி காலை மாலை 3 நாள்கள் கொடுக்க வேண்டும். மாலையில் கொடுக்கும் மருந்து ஐந்து மணிக்குள் கொடுத்து விட வேண்டும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவமணி நாகம்மாநூல், பக்கம் 11 & 12)

 

03.   ஆடுதின்னாப்பாளை மருந்து முதல் நாள் காலை மருந்து சாப்பிட்டவுடன் ஒரு மணி நேரம் கழித்து உப்பில்லாமல் புழுங்கல் அரிசிக் கஞ்சி கொடுக்க வேண்டும்.மதியம் உப்புச் சேர்க்காமல் கேழ்வரகு ரொட்டி தட்டி சுட்டுக் கொடுக்க வேண்டும்.தேவையானால் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இரவிலும்  இதே உணவுதான். மருந்து சாப்பிடும் மூன்று நாள்களும் இதேமாதிரி உணவுக் கட்டுப்பாடு தேவை. வேறு எந்தப் பொருளும் சாப்பிடக் கூடாது. நான்காம் நாளிலிருந்து பச்ச்சரிசி அல்லது புழுங்கல் அரிசிச் சோறு சாப்பிடலாம். குழம்பிற்கு துவரம் பருப்பு மட்டுமே பயன்படுத்தலாம். குழம்பில் அரைப் புளி, அரைக் காரம் சேர்க்கலாம். மிளகாயைக் குறைத்து மிளகு சேர்க்கலாம். குழம்பைத் தாளிக்க எள் எண்ணெய் / பசு நெய் விட்டு சிறிது கறிவேப்பிலை, மிளகு போட்டு தாளிக்கலாம். குழம்பு அல்லாமல் மிளகு ரசம் சாப்பிடலாம். ஆனால் கால் பாகம் புளி, கால் பாகம் மிளகாய், போதுமான மிளகு சேர்க்கலாம்.முதல் நாள்மருந்து சாப்பிட்டதிலிருந்து 15 ஆம்நாள் அதே மருந்தை மூன்று நாள் சாப்பிடவேண்டும்.அதே போல் பத்திய உணவை 15 நாள் சாப்பிட்டு வர வேண்டும்.ஒரு மாதம் கழித்து பத்திய உணவு தேவையில்லை.  ஆனால் வாழ்க்கை முழுதும் பலாப் பழம் சாப்பிடக் கூடாது. வரகு அரிசிச் சோறு ஆகவே ஆகாது. மூன்று மாதங்கள் வரை எண்ணெயினால் செய்த பலகாரங்கள் சாப்பிடக் கூடாது. கருவாடு, மீன் கோழி, ஆட்டுக் கறி போன்ற மாமிச உணவுகளை உண்ணக்கூடாது. இனிப்புப் பண்டங்கள் ஆகாது. மருந்து சாப்பிட்டு ஒரு மாதம் வரை வலிப்பு நோயின் தாக்கம் இருக்கும். அதன் பின் மறைந்து விடும். ஆயுள் முழுக்க வலிப்பு வரவே வராது. (ஆதாரம்: ”நாட்டு மருத்துவமணி நாகம்மாநூல், பக்கம் 12 ,13 , 14 & 15)

 

04.   ஆட்டுப் பால் தினசரி சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோய் வருவதைத் தடுக்கலாம்.(1077) (1267) (1933)

 

05.   எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன் இலையை எடுத்து உலர்த்தியபொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், த்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும். இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.

 

06.   கண்டங்கத்தரி, ஆடாதொடை, இண்டு, இசங்கு, சுக்கு, திப்பிலி, துளசி, தூதுவேளை, வால்மிளகு  ஆகியவை தலா 2 கிராம் எடுத்து பொடித்து 2 தம்ளர் நீரில் கொதிக்க வைத்து, காய்ச்சி, வடிகட்டி அருந்தினால் ஆஸ்துமா, வலிப்பு நோய்கள் குணமாகும்.

 

07.   பிரமிய வழுக்கை இலைச் சாற்றுடன் சமனளவு நெய் கலந்து காய்ச்சி, வடித்து காலை மாலை ஒரு தேக்கரண்டி கொடுத்து வந்தால் காக்கை வலிப்புக் குணமாகும். சித்தப் பிரமை விலகும். (1075) (1604) (1656)

 

08.   முருங்கை மரப் பட்டையை நீரிலிட்டு அவித்துச் சாறெடுத்து ரசமாக்கி உணவுடன் சாப்பிட்டு வரக் குளிர் காய்ச்சல், பாரிச வாயு, காக்கை வலிப்பு, சூதக சன்னி ஆகியவை தீரும்

 

09.   முருங்கைப் பட்டையை அவித்து சாறு எடுத்து இரசமாக்கி அருந்தி வந்தால் குளிர் காய்ச்சல் குணமாகும். (1592)  காக்காய் வலிப்பு குணமாகும்.  (1618)

 

10.   முருங்கைப் பட்டையை அவித்துச் சாறெடுத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் காக்காய் வலிப்பு குணமாகும்.(1083)

=========================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01).அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்   ஸ்ரீ சேஷா சாய்  ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவஅதிகாரி,  டாக்டர்.  வெ .ஹரிஷ்   அன்புச் செல்வன்  M.D(s),  அவர்கள்  2017 –ஆம்  ஆண்டு    தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]

{01-09-2021}

==========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக