மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 செப்டம்பர், 2021

வலிப்பு - மூர்ச்சை (Trance )

 

 

01.   சில குழந்தைகள் அடிக்கடி மூர்ச்சை போட்டு  விழுந்து  விடுவார்கள்.  (இது ஒரு வகையான வலிப்பு நோய்) இதற்கான மருந்து   வருமாறு :-  ஒரு பிடி வசம்பினை உரலில் போட்டு இடித்துச் சலித்துக் கொள்ள வேண்டும். அதில்  மூன்று சிட்டிகைப் பொடியை எடுத்து,  சிறிது தேன் விட்டுக் குழைத்து நாவால் நக்கிச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் 20 நாள் சாப்பிட வேண்டு.  மருந்து சாப்பிடும் காலத்தில் எண்ணெய்ப் பொருள்கள், இனிப்புப் பொருள்கள் சாப்பிடக் கூடாது. ஆயுள் முழுவதும் பலாப் பழம் சாப்பிடக் கூடாது. இப்படிச் செய்தால் மூர்ச்சை வலிப்பு திரும்ப வராது.

=========================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01).அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்   ஸ்ரீ சேஷா சாய்  ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவஅதிகாரி,  டாக்டர்.  வெ .ஹரிஷ்   அன்புச் செல்வன்  M.D(s),  அவர்கள்  2017 –ஆம்  ஆண்டு    தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]

{01-09-2021}

==========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக