மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

வீக்கம் - குணமடைய (Healing of swelling)

 

01.   அமுக்கராங் கிழங்கைப் பச்சையாகக்  கொண்டுவந்து பசுவின் நீர் விட்டு அரைத்து, கழலை (கிராந்தி), கழுத்துக் கழலை (கண்ட மாலை)., வீக்கம், இடுப்பு வலி இவைகளுக்குப் பற்றுப் போட்டால் இவை விலகும்.

 

02.   அமுக்கராக் கிழங்குப் பொடியைப் பாலில் குழைத்து வீக்கம், படுக்கைப் புண்ணுக்குப் போட்டு வந்தால், அவை விரைவில் குணமாகும்.(612)

 

03.   ஆடாதொடை இலை ஒருபங்கு இலைக்கு எட்டுப் பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி எட்டில் ஒரு பங்காகக் குறுக்கி வடிகட்டிய குடிநீரைத் துணியில் தோய்த்து ஒற்றடமிட, வீக்கம், சூலை, கீல்பிடிப்பு முதலியன தணியும்.

 

04.   இலந்தை இலையை அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குணமாகும்.(628)

 

05.   ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களி போல் கிளறி, இளஞ்சூட்டில் வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப் போட்டு வந்தால், விரைவில் குணமாகும்.(305)

 

06.   ஓமத்தை, தேவையான அளவு நீர் விட்டு அரைத்து, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து, வாணலியில் வைத்துச் சூடாக்கிக் கட்டினால் வீக்கம் குறையும்.

 

07.   கடுகையும் வசம்பையும் சிறிதளவு எடுத்து இடித்துப் பொடி செய்து, பசுவின் சிறு நீரில் குழைத்துத் தடவி வந்தால் வீக்கம் குறையும்.

 

08.   குப்பைமேனி இலைச் சாறுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து அரைத்துத் தடவி வந்தால் வீக்கம் குணமாகும்.(569)

 

09.   குப்பைமேனி இலையைச் சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் பூசலாம். இதையே காது வலிக்கு காதைச் சுற்றிப் பூச, நோய் தணியும்.

 

10.   கொள்ளுக் காய்வேளைச் செடியின் வேரை எடுத்து வந்து  அரைத்து மோரில் கலக்கி அருந்தி வந்தால் வீக்கம், பாண்டு, இராஜபிளவை, முகப்பரு ஆகியவை குணமாகும்.(1703)

 

11.   தக்காளிக் காய் சப்பிட்டு வர உடல் வீக்கம் குறையும் (808)

 

12.   தர்பூசணிப் பழத்தில் கோலின் (Gholin) என்னும் சத்து அதிகம் காணப் படுவதால், இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். உடலில் கொழுப்பு உறிஞ்சுவதற்கு (Fat Absorption) துணை புரியும்

 

13.   நத்தைச் சூரி செடியை அரைத்துப் பற்றுப் போட்டால் உடலில் ஏற்படும் கல் போன்ற வீக்கம் கரையும்.

 

14.   நீர்பிரம்மி (பிரமிய வழுக்கை) முழுத் தாவரத்தையும் ஆமணக்கு எண்ணெயில் வதக்கி வீக்கம், கட்டிகள் உள்ள இட்த்தில் ஒற்றடம் இட்டு பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்டினால் வீக்கம், கட்டிகள் கரைந்து போகும்.

 

15.   நொச்சி இலைகளைப் பறித்து இடித்துச் சாறு எடுத்து வீங்கிய சதை மீது பூசி வந்தால், வீக்கம் குணமடையும்.(303)

 

16.   புங்கஇலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி, வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் வீக்கம் குறையும். விரைவில் குணமாகும்.(574)

 

17.   புளிச்சக் கீரை உடலில் உள்ள வீக்கத்தைக் கட்டுப் படுத்தும். (549)

 

18.   பூவரசு  இலையை அரைத்து வெதுப்பி வீக்கங்களின் மீது கட்டி வந்தால் வீக்கம் விரைவில் சரியாகும்.

 

19.   பூவரசு இலைகளை அரைத்து  நல்லெண்ணையில் வதக்கிக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.  (1021) (1494)

 

20.   மாவிலங்க இலையை அரைத்துப் பற்றுப் போட்டால் வீக்கம் கரையும்

 

21.   மாவிலங்க இலையை அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால் அனைத்து வகையான வீக்கங்களும் சரியாகும்.(579)

 

22.      மிளகய்ப் பூண்டு வேரினை எடுத்து நீர்விட்டுக் கசாயம் வைத்து இரண்டு வேளை குடித்து வந்தால் வாதநோய், வாத வீக்கம் ஆகியவை குணமாகும்.   (1543)

 

23.   மூக்கிரட்டை வேர், அறுகம்புல். மிளகு, கீழாநெல்லி ஆகியவற்றைச் சம அளவு எடுத்து கசாயம் செய்து காலை மாலை சாப்பிட்டு வந்தால்  வீக்கம், நீர்க்கட்டு குணமாகும்.   (1611) மஞ்சள் காமாலை தீரும்.  (1599)

 

24.   வெந்தய இலைகளை அரைத்து வீக்கங்களின் மீது பற்றுப் போட்டு வந்தால், வீக்கம் குணமாகும்.

 

25.   வேப்பிலையை நீர் விட்டு அரைத்து களி போல் கிண்டி மேலுக்குப் போட வீக்கம், நாட்பட்ட புண், தோலைப் பற்றிய புண் நோய்கள் தீரும்.

 

26.   வேளை (நல்ல வேளை) ( சாறு வேளை ) இலையை வதக்கிக் கட்டி வந்தால் வீக்கங்கள் குணமாகும்.  வலி குறையும். (1707)

 ===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)20]

{05-09-2021}

==========================================================================

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக