மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 2 செப்டம்பர், 2021

வாய் - நாற்றம் ( Mouth Bad Smell)

 

01.   ஆவாரம் பட்டையைக் கசாயம் வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் இராது.

 

02.   ஏலக்காய் விதைகளை மென்று, உமிழ் நீரை விழுங்கி வந்தால் வாய் வாடை நீங்கும்.

 

03.   கசகசாவை அரைப் பிடி எடுத்து உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து காலை, மதியம், மாலை ஐந்து மணி அளவில் என்று மூன்று வேளைகள் வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும். உடனே பனங்கற்கண்டு அரைப் பிடிஊற எச்சிலை விழுங்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில மொந்தன்பழம் அல்லது பூவன் பழம் பாதிப்பழம் எடுத்து தோலை உரித்து விட்டு சுளை மீது ஆலம் பாலைத் தடவி வாயில் போட்டு மெல்லாமல் அப்படியே விழுங்கி விட வேண்டும். 12 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் வாய்ப் புண், வாய் நாற்றம், குடற் புண் ஆகியவை குணமாகும். சாப்பாட்டில் அரைப்புளி, அரை காரம் சேர்க்கலாம். மோர் நிரம்ப அருந்த வேண்டும். இனிப்பு கூடாது.ஒரு மாதம் இவ்வாறு பத்தியம் கடைப்பிடிக்கவும். (ஆதாரம்: “ நாட்டு மருத்துவமணி நாகம்மா “)

 

04.   கடுக்காய்த் தோல், தான்றிக் காய், நெல்லி முள்ளி மூன்றையும் குடிநீரில் ஊறவைத்து அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் தீரும்.(251)

 

05.   கிச்சலிக் கிழங்கினை வில்லைகளாக நறுக்கிக் காய வைத்துப் பொடி செய்து நீரில் இட்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.(1137)

 

06.   கொய்யாவின் இளம் தளிர் இலைகளைக் கழுவி, மூன்று தம்ளர் தண்ணீர் சேர்த்து, பத்து நிமிடம் பாத்திரத்தில் கொதிக்க விடவும். பின்னர் குளிர வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல், ஈறு ஆகியவை பலப்படும். வாய் துர்நாற்றம் நீங்கும்.

 

07.   கொய்யாவின் இளம் தளிர் இலைகளைக் கழுவி, மூன்று தம்ளர் தண்ணீர் சேர்த்து, பத்து நிமிடம் பாத்திரத்தில் கொதிக்க விடவும். பின்னர் குளிர வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல், ஈறு ஆகியவை பலப்படும். வாய் துர்நாற்றம் நீங்கும்.

 

08.   கோதுமைப் புல்லை தினமும் வாயிலிட்டு மென்றுத் துப்பிவிட  வேண்டும். இவ்வாறு செய்தால் வாய் துர்நாற்றம் நீங்கிடும் (266)

 

09.   தான்றிக் காயின் மேல் தோலைஎடுத்து கசாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் தீரும். (Harish)

 

10.   திரிபலா சூரணத்தை சிறிதளவு எடுத்து நீரிலிட்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் இராது.

 

11.   நெல்லி முள்ளி ( உலர்ந்த நெல்லிகாய் ), தான்றிக் காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் தீரும்.(251)

 

12.   வேப்பிலை நான்கு கைப்பிடி, ஒரு பிடி உப்பு ஆகியவற்றை எடுத்துச் சட்டியில் போட்டுக் கருக்கித் தூளாக்கி, அதைக்கொண்டு பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம், பல் உபாதைகள் நீங்கும்.(237)

 

===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)17]

{02-09-2021}

==========================================================================

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக