01. உத்தாமணி இலைச் சாற்றுடன் சுக்கு பெருங்காயம் பொடித்துக் காய்ச்சி, இளஞ்சூட்டில் பற்றுப் போட்டால் வாத வலி, வீக்கம் குணமாகும்.
02. ஊமத்தை இலையை
நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் தீரும்.(1738)
03. ஊமத்தை இலையை நல்லெண்ணெயில்
வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக் கட்டிகள், அண்ட வாயு, தாய்ப் பால்
கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.
04. ஒரு வாயகன்ற புட்டிலில் (Bottle) 150 கிராம் தேங்காய் எண்ணையை விட்டு, அந்த எண்ணெய் மேல் மட்டம் வரை செண்பகப் பூவைக் கிள்ளிப் போட்டு, தினசரி வெய்யிலில் வைத்து எடுத்து அந்த எண்ணெயை வீக்கம், வாதவலி உள்ள இடத்தில் சூடுபறக்கத் தேய்த்து வெந்நீரைத் தாங்கும் அளவில் விட்டு உருவி விடவேண்டும். இந்த விதமாக காலை, மாலை செய்து வந்தால் வாத வலி, வீக்கம் குணமாகும்.
05. கடுகு எண்ணெயில் வெங்காயச் சாறினைக் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வாதவலி, மூட்டு வலி ஆகியவை தீரும்.(310)
06. தழுதாழை இலைகளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்துக் குளித்து வந்தால் வாத வலிகள் அனைத்தும் தீரும்.
07. தழுதாழை இலையை ஆலிவ்
எண்ணெயில் வதக்கிக் கட்ட வாத வீக்கம் தீரும். நீரில் கொதிக்க வைத்துக்
குடிக்க வாத வலி தீரும்.
08. நொச்சி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு, சற்று நேரம் வைத்திருந்து, இறக்கி பொறுக்கும் சூடு நிலைக்கு வந்தவுடன் அதில் குளித்து வந்தால், வாதத்தால் ஏற்படும் உடல் வலி தீரும். (2006)
09. புன்னை விதையை
அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட்டால் கீல்
வாயு, முடக்கு வாதம், வாத வலிகள் தீரும்.
10. முடக்கத்தான் இலை அடை அல்லது தோசையைத் தினசரி காலையில் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மாலையிலும் ஒரு முறை சாப்பிட வேண்டும். தோசைக்கல்லில் எண்னெய் தடவாமல்ம்பசிநெய் தான் தடவ வேண்டும். இரவில்மட்டும் செம்மண் குழம்பை வலியுள்ள முழங்கால் மூட்டின் மேலும்கணுக்காலைச் சுற்றியும் பூசிவிட வேண்டும்.தொடர்ந்து ஏழு நாள் இவ்வாறு செய்ய வேண்டும். அடுத்த ஏழு நாள் மிளகினைத் தண்ணீர் விட்டு அரைத்து வலியுள்ள இடங்களில் பற்றுப்போட வேண்டும். பகலில் தென்னமரக்குடி எண்ணெயை இளஞ்சூடு ஏற்றி வலியுள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மூன்று மாதங்களுக்குப் பின் வாத வலி படிப் படியாகக் குறைந்து வாதம் முற்றிலும்குணமாகும்.
11. முருங்கை இலையை
விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத வலி
தீரும். (1739)
12. வாதமடக்கி (வாதநாராயணன்) இலையைச் சமைத்துண்ண வாத நீர் கழியும். வாரம் 2 அல்லது 3 முறைப் பயன்படுத்தலாம். வாத வலி, வீக்கம், குத்தல் குடைச்சல் தீரும்.
13. வெந்நீர்த் தொட்டியில் தொப்புள் வரை மூழ்கி இருக்குமாறு அரை மணி நேரம் இருந்து வந்தால் மூலக் கடுப்பு, வாத வலி, முழங்கால் வலி ஆகியவை தீரும்.
(393)
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01).அடைப்புக்
குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ
அதிகாரி, டாக்டர். வெ .ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப்
பெற்றவை !
(03).அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]
{01-09-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக