மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 செப்டம்பர், 2021

வாதம் - வாத வீக்கம் (Rheumatic Swelling)

 

01.  அரப்பு என்று அழைக்கப்படுகின்ற இலுப்பைப் பிண்ணாக்கை எடுத்து அரைத்துப் பசையாக்கி அனலில் காட்டி இளஞ்சூட்டில் கட்டினால் வாத வீக்கம் சரியாகும்.(1115)

 

02.  ஆமணக்கு இலையைப் பொடியாய் அரிந்து விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுத்து வரக் கீல் வாதம், வாத வீக்கம் தீரும்.

 

03.  இலுப்பைப் பிண்ணாக்கை அரைத்துப் பசையாக்கி, அனலில் காட்டி இளஞ்சூட்டுடன் கட்டி வந்தால் வாத வீக்கம் சரியாகும். (1115)

 

04.  உத்தாமணி இலைச் சாற்றுடன் சுக்கு பெருங்காயம் பொடித்துக் காய்ச்சி, இளஞ்சூட்டில் பற்றுப் போட்டால் வாத வலி, வீக்கம் குணமாகும்.

 

05.  ஒரு வாயகன்ற புட்டிலில் (Bottle) 150 கிராம் தேங்காய் எண்ணையை விட்டு, அந்த எண்ணெய் மேல் மட்டம்வரை செண்பகப் பூவைக் கிள்ளிப் போட்டு, தினசரி வெய்யிலில் வைத்து எடுத்து அந்த எண்ணெயை வீக்கம்,வாதவலி உள்ள இடத்தில் சூடுபறக்கத் தேய்த்து வெந்நீரைத் தாங்கும் அளவில் விட்டு உருவி விடவேண்டும் இந்த விதமாக காலை, மாலை செய்து வந்தால்வாத வலி, வீக்கம் குணமாகும்.

 

06.  குப்பைமேனி, சங்கிலை வேப்பிலை, நாயுருவி, நொச்சி ஆகியவற்றை எடுத்து அவித்து வேது பிடித்தால் வாத வீக்கம், கீல் வாயு ஆகியவை தீரும்.(1099)

 

07.  சங்கிலை, வேம்பு நொச்சி, நாயுருவி, குப்பைமேனி ஆகியவற்றில் வேது பிடிக்க, வாத வீக்கம், கீல் வாயு தீரும்.

 

08.  சாறு வேளை இலையை வதக்கிக் கட்டி வரக் கீல் வாத வீக்கம் குறைந்து வலி தீரும்.

 

09.  செண்பகப் பூவைக் கிள்ளி ஒரு வாயகன்ற புட்டிலில் (Bottle) 150 கிராம் தேங்காய் எண்ணையை விட்டு, அந்த எண்ணெய் மேல் மட்டம் வரைப் பூவைப் போட்டு, தினசரி வெய்யிலில் வைத்து எடுத்து அந்த எண்ணெயை வீக்கம், வாதவலி உள்ள இடத்தில் சூடுபறக்கத் தேய்த்து வெந்நீரைத் தாங்கும் அளவில் விட்டு உருவி விடவேண்டும். இந்த விதமாக காலை, மாலை செய்து வந்தால் வாத வலி, வாத வீக்கம் குணமாகும்.

 

10.  தழுதாழை இலையை ஆலிவ் விதை எண்ணெயில் வதக்கிக் கட்ட யானைக்கால் வீக்கம், விரை வாதம், வாத வீக்கம், நெறிக் கட்டிகள் தீரும். (1101)

 

11.  தொட்டாற் சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்துப் பற்றிட வாத வீக்கம் கரையும். கீல்வாதம் கரையும்.

 

12.  மாவிலங்க இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் வாதம், வீக்கம், எரிச்சல் நீங்கும்.

 

13.  மிளகாய்ப் பூண்டு வேர் 40 கிராம் எடுத்து 250 மி.லி நீரில் போட்டு 100 மி.லி யாகக் காய்ச்சி தினம் 2 வேளைக் குடித்து வர வாத வீக்கம்,வாத நோய், பாரிச வாதம் தீரும்.

 

14.     மிளகாய்ப் பூண்டு வேரினை எடுத்து நீர்விட்டுக் கசாயம் வைத்து இரண்டு வேளை குடித்து வந்தால் வாதநோய், வாத வீக்கம் ஆகியவை குணமாகும்.   (1543)

 

15.  மிளகாய்ப் பூண்டு வேர் 40 கிராம் எடுத்து 250 மி.லி நீரில் போட்டு 100 மி.லி யாகக் காய்ச்சி தினம் 2 வேளைக் குடித்து வர வாத வீக்கம்,வாத நோய், பாரிச வாதம் தீரும்.

 

16.  முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால், வாதப் பிடிப்பு, வாத வீக்கம் தீரும்.  (1560)

 

17.  முள்ளங்கியைச் சமைத்து உண்டு வந்தால்  வாத வீக்கம் தீரும்

 

18.  வாதநாராயணன்  இலையை சிற்றாமணக்கு நெய் ( விளக்கெண்ணெய் ) விட்டு வதக்கி வாத வீக்கங்களுக்கு ஒற்றடம் கொடுக்கலாம்.

 

19.  வாதநாராயணன் இலையைச் சமைத்துண்ண இரண்டொரு முறை மலங் கழியும். வாத நீர் கழியும். வாரம் 2, 3 முறைப் பயன்படுத்தலாம். வாத வலி, வீக்கம், குத்தல், குடைச்சல் தீரும்

 

20.  வாதநாராயணன் இலைச் சாறு ஒரு அவுன்ஸ் (30 மி.லி. ) குடித்து வந்தால் வாத வீக்கம், வாதக் குடைச்சல் ஆகியவை தீரும்.  (1625)

 

21.  வாதமடக்கி இலையைச் சமைத்துண்ண வாத நீர் கழியும். வாரம் 2 அல்லது 3 முறைப் பயன்படுத்தலாம். வாத வலி,  வீக்கம்,  குத்தல் குடைச்சல் தீரும்.

 ====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01).அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்   ஸ்ரீ சேஷா சாய்  ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரி,  டாக்டர்.  வெ .ஹரிஷ்   அன்புச் செல்வன்  M.D(s),  அவர்கள்   2017 –ஆம்  ஆண்டு    தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]

{01-09-2021}

==========================================================

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக