மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 செப்டம்பர், 2021

வாதம் - கீல்வாதம் (Rheumaticism)

 

01.   அவரி இலை ஒரு பிடி, 2 சிட்டிகை சீரகம், பொரித்த பெருங்காயம், மிளகு சமனெடை சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து ஒரு நாளைக்கு 3 வேளையாகக் கொடுத்துவர நரம்புச் சிலந்தி, கீல் வாதம் ஆகியவை நீங்கும்.உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும்

 

02.   அவுரி இலை 30 கிராம், சீரகம் 2 கிராம், மிளகு 6 எண்ணிக்கை ஆகியவற்றைச் சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகி 50 மி.லி.வீதம் தினம் 4 வேளை கொடுக்கக் கீல் வாதம் தீரும்.


03.   ஆமணக்கு இலையைப் பொடியாய் அரிந்து விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுத்து வரக் கீல் வாதம், வாத வீக்கம் தீரும்.

 

04.   உத்தாமணி இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க கீல் வாதம்,  முடக்கு வாதம்,  வாதக் குடைச்சல் தீரும்.

 

05.   கண்டங் கத்தரி  இலைச் சாற்றில் எண்ணெய் கலந்து காய்ச்சிப் பூசிவர, தலைவலி, கீல்வாதம், அக்குள் நாற்றம் முதலியவை நீங்கும்.

 

06.   கிச்சிலிக் கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து வேப்ப எண்ணெய் ஊற்றிக் காய்ச்சி, அதைக் கால் மூட்டுகளில் தேய்த்து வந்தால் கீல் வாத நோய் குணமாகும்.(314)


07.   குப்பைமேனி, சங்கிலை வேப்பிலை, நாயுருவி, நொச்சி ஆகியவற்றை எடுத்து அவித்து வேது பிடித்தால் வாத வீக்கம், கீல் வாயு ஆகியவை தீரும்.(1099)

 

08.   குன்றிமணி விதையைத் தனியாகவோ, மற்ற மருந்துகளுடனோ சேர்த்து அரைத்து, அடிபட்டவீக்கம், வலி, கீல்வாயு, பக்க வலி, முடியுதிரல் முதலியவைகளுக்குத் தரலாம்.


09.   சங்கிலை, வேம்பு, நொச்சி, நாயுருவி,


10.   சத்திச் சாரணை இலையைப் பிழிந்து சாறு எடுத்து நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி தடவி வந்தால் வீக்கம் கரையும்(1721) கீல்வாத வீக்கம் குறைந்து குணமாகும்.(1740)

 

11.   சாறு வேளை இலையை வதக்கிக் கட்டி வரக் கீல் வாத வீக்கம் குறைந்து வலி தீரும்.

 

12.   தழுதாழை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒற்றடம் கொடுத்து வர சுளுக்கு, கீல் பிடிப்பு, மூட்டு வலிகள் தீரும்.

 

13.   தொட்டாற் சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்துப் பற்றிட வாத வீக்கம் கரையும். கீல்வாதம் கரையும்.

 

14.   மாதுளை கீல்வாதம் போன்ற நோய்களைக் குறைப்பதற்கும் உதவும்

 

15.   மிளகுத் தூள் ஒரு மேஜைக் கரண்டி எடுத்து  சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வந்தால் சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு குணம் தரும்.

 

16.   முருங்கை மரப் பட்டையைக் கடுகு சேர்த்து அரைத்துப் பற்றுப் போட்டால் கீல் வாதம் தீரும். எரிச்சல் கண்டால் குளிர் நீரால் கழுவி விடவும். (முருங்கை காண்க.)  (1619)

 

17.   மூக்கிரட்டை வேர் 30 கிராம், அறுகம் புல் 30 கிராம், மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தினம் 3 வேளைக் குடித்து வரக் கீல் வாதம் தீரும்.

 

18.   மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்துவர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணறல் தீரும்.

 

19.   மூக்கிரட்டை வேர், அறுகம்புல், மிளகு ( 3 : 3 : 1 ) ஆகியவற்றைச் சிதைத்து நீர் சேர்த்துச்  சுண்டக் காய்ச்சிப், பருகி வர கீல் வாதம் குணமாகும். (1117)

 

20.   வசம்பைக் காசுக் கட்டியுடன் சேர்த்து நீர் விட்டு அரைத்து பற்றுப் போட்டால் நாட்பட்ட கீல்வாத நோய் குணமாகும்.

 

 ====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01).அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்   ஸ்ரீ சேஷா சாய்  ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரி,  டாக்டர்.  வெ .ஹரிஷ்   அன்புச் செல்வன்  M.D(s),  அவர்கள்   2017 –ஆம்  ஆண்டு    தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]

{01-09-2021}

==========================================================

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக