மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 செப்டம்பர், 2021

வாதம் - இளம்பிள்ளை வாதம் (Polio)

 

01.  கண்டங்கத்தரி இலைகளை மண்பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பிலேற்றி வேகவைத்த நீரில் குளிப்பாட்டி வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் இளம்பிள்ளை வாத நோய் தணியும்

 

02.  காக்கிரட்டை வேர், நொச்சி இலை, மூக்கிரட்டை வேர் ஆகியவற்றை எடுத்து சிதைத்து சுக்கு மிளகு சேர்த்து கசாயம் வைத்து தினசரி 30 மி.லி வீதம் கொடுத்து வந்தால், இளம்பிள்ளை வாதம் குணமாகும்.(1439)

 

03.  நொச்சிக் குடிநீர் தயாரித்து காலை மாலை இரு வேளைகள் சிறிதளவு கொடுத்து வந்தால் ஆரம்ப நிலை இளம் பிள்ளை வாதம் குணமாகும்.  (1116)

 

04.  நொச்சி இலை, மூக்கிரட்டை வேர், காக்கிரட்டை வேர் சிதைத்து சுக்கு, மிளகு சேர்த்து கசாயம் செய்து 30 மி.லி கொடுத்து வந்தால் இளம் பிள்ளை வாதம் குணமாகும்.  (1439)

 

05.  நொச்சி இலைக் கசாயம் ஒரு வாரத்திற்கு தினசரி இரண்டு வேளை வீதம் கொடுத்து வந்தால் இளம் பிள்ளை வாதம் தீரும்.  (1737)

 

06.  மிளகாய்ப் பூண்டு விதையை எடுத்து எண்ணெய் தயாரித்து இரண்டு துளி எடுத்து சர்க்கரையில் கலந்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளம் பிள்ளை வாதம், பக்க வாதம், பாரிச வாயு, முகவாதம், இழுப்பு ஆகியவை குணமாகும்.(1108)

 

07.  மூக்கிரட்டை வேர், காக்கிரட்டை வேர், நொச்சி இலை ஆகியவற்றைச் சிதைத்து, சுக்கு, மிளகு சேர்த்து கசாயம் வைத்து தினசரி 30 மி.லி கொடுத்து வந்தால் இளம்பிள்ளை வாதம் குணமாகும்.  (1439)

 ====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01).அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்   ஸ்ரீ சேஷா சாய்  ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரி,  டாக்டர்.  வெ .ஹரிஷ்   அன்புச் செல்வன்  M.D(s),  அவர்கள்   2017 –ஆம்  ஆண்டு    தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]

{01-09-2021}}

==========================================================

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக