மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 2 செப்டம்பர், 2021

விந்து (Sperms)

 

01.   அரச மரத்தின் பழங்களைச் சேகரித்து அதில் உள்ள விதைகளை உலர்த்திப் பொடி செய்து தினசரி அரை தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து அருந்தி வந்தால் விந்து எண்ணிக்கை அதிகரிக்கும்.(492)

 

02.   ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாள்களில் விந்து அணுக்கள் உற்பத்தி ஆகும்.

 

03.   ஆலமரத்தின் இளம் கொழுந்துகளை எடுத்து வந்து மைய அரைத்து கோலிக் குண்டு அளவுக்கு எடுத்து, பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கெட்டிப் படும்.(484)

 

04.   கொள்ளினை  எடுத்து  வேக வைத்து அடிக்கடி உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

 

05.   சாதிக் காய்ப் பொடியை அளவாக பாலில் கலந்து இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி மிகும். ஆனால் அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கம் வரும்.(301)

 

06.   செவ்வாழைப் பழத்தை 48 நாட்கள்தினசரி எடுத்துக்கொள்வதால், விந்து அணுக்களின் எண்ணிக்கை கூடும். உடல் பலத்தை அதிகரிக்கும்.

 

07.   நத்தைச் சூரி மூலிகை விந்து விரைவில் வெளியேறாமல் செய்ய உதவும்

 

08.   நாவற்பழம் சாப்பிட்டு வந்தால் விந்து கெட்டிப்படும்.  (504)

 

09.   ரங்கி விதையில் துத்தநாகச் சத்து இருப்பதால், விந்து உற்பத்திக்கு உதவும்.

 

10.   மாதுளை விதைகளை உண்டு வந்தால் நீர்த்துப் போன விந்து கெட்டிப்படும்.

 

11.   முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக்  கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த பொடியில் 5 கிராம் எடுத்து 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து, காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது (விந்து) வளர்ச்சியைக் கொடுக்கும்.

 

12.   முருங்கை விதையைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து இரண்டு வேளை வீதம் சில நாட்கள் சாப்பிட்டால் நீர்த்துப் போன விந்து கெட்டிப்படும்.

 

13.   முருங்கைப் பூவைப் பாலுடன் சேர்த்து வேகவைத்து உண்பதால், கண்ணிற்குக் குளிர்ச்சி ஏற்படும்; விந்துவைப் பலப்படுத்தும்.

 

14.   வாழைப் பூவை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.  (1227) (1291) (1642)

 

15.   விளாம் பிசினை உலர்த்தி இடித்து தூள் செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் உண்டு வந்தால் விந்து ஒழுக்கு நிற்கும்.  (523)  பெரும்பாடு தீரும். (1548)  நீர் எரிச்சல்குணமாகும்.  (1647)  உள் உறுப்பு இரணம் தீரும்.  (1661)

 

16.   வெந்தய இலையை உணவாகச் செய்து சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு ஏற்படும் விந்து முந்துதல் என்னும் பிரச்சினை சரியாகும்.

===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)17]

{02-09-2021}

==========================================================================

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக