மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “அ”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “அ”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 மே, 2021

உறக்கமின்மை (Sleeplessness)

01.   சீரகத்தை வறுத்து பொடியாக்கி, வாழைப் பழத்தில் தூவிச் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும். (276) (1907)

02.   மருதாணிப் பூவை எடுத்து சுத்தம் செய்து இரவு படுக்கப் போகும் முன் இரண்டு கொத்துகளைச் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.  (1453)

03   திருநீற்றுப் பச்சிலை இலைகளைப் பறித்து நன்கு கசக்கி, அடிக்கடி அதை முகர்ந்து வந்தால் தலை பாரம் நீங்கும்.  (412)  தூக்கமின்மை நீங்கும்; நன்கு தூக்கம் வரும். (1277)

04.   வெங்காயச் சாறு ஒரு துளி கண்ணில் பட்டால் போதும். சிறிது எரிச்சலுக்குப் பின் ஓய்வுடன் நல்ல தூக்கம் வரும்.  (032)

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================

உள்ரணங்கள் (Internal Soreness)

01.   தென்னம் பூவை வாயில் இட்டு மென்று தின்று வந்தால் குடல் புண்கள் போன்ற உள்ரணங்கள் ஆறும்.(293)(461)

02.   கொட்டைக் கரந்தைச் செடியை உலர்த்திப் பொடி செய்து, கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உள்ரணங்கள் குணமாகும்.((1716)

03.   கொத்தமல்லியை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் உள் ரணம் குணமாகும். (459)

04.   தாளிக் கீரையை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து நெய் கூட்டி உணவுடன் உட்கொண்டு வந்தால் உள் உறுப்புகளில் ஏற்படும் புண்கள் (இரணம்) ஆறும்.(621)

05.   விளாம் பிசினை உலர்த்தி இடித்து தூள் செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் உண்டு வந்தால் விந்து ஒழுக்கு நிற்கும்.  (523)  பெரும்பாடு தீரும்.  (1548)  நீர் எரிச்சல் குணமாகும்.  (1647)  உள் உறுப்பு இரணம் தீரும்.  (1661)

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================

உள் உறுப்புகள் பலம் பெற. (To make Internal Organs Healthy)

1)    கிராம்புப் பொடியை அரை கிராம் எடுத்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் அக உறுப்புகள் பலம் பெறும்.(611)

2)    சீரகத்தைப் பொன் வறுவலாக  வறுத்து, கொதிக்க வைத்து ஆறிய வெந்நீரில் போட்டு வைக்க  வேண்டும். இந்த நீரைக் குடி நீராகப் பயன்படுத்தினால் உள் உறுப்புகள் சீராகும்.(1980)

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

=========================================================

உதிரப்போக்கு (Menorrhagia)

01.  அரிசிமாவை ஆவியில் அவித்து, தேங்காய், கருப்பட்டி சேர்த்து உண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் அதி உதிரப் போக்கு சமன்படும்.(553)

02.  ஈஸ்வரமூலி வேரை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில் போட்டு எட்டில் ஒரு பங்காகக் காய்ச்சி 30 மி.லி வீதம் 3 வேளையாகக் கொடுக்க உதிரச் சிக்கல் தீரும். பாம்புக்கடி, தேள் கடி விஷம் நீங்கக் கடிவாயில் இலையைக் கசக்கித் தேய்க்கலாம்

03.  கருஞ்சீரகம், சதகுப்பை, மரமஞ்சள் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை பலப்படும். உதிரச் சிக்கல் தீரும். (219)

04.  கருஞ்சீரகம், சதகுப்பை, மரமஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து பனைவெல்லம் கலந்து சோம்பு நீருடன் பருகி வந்தால் உதிரச் சிக்கல் நீங்கி கருப்பை பலப்படும்,(607)

05.  கிராம்புப் பொடி அரை கிராம் எடுத்து பனை வெல்லத்துடன் சேர்த்து மாதவிடாய்க் காலத்தில் உள்ளுக்குச் சாப்பிட்டால் உதிரச் சிக்கலால் ஏற்படும் வயிற்று வலி தீரும்.(635)

06.  கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவுகலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலைவெந்நீருடன் 40 நாள் கொள்ள  பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

07.  சதகுப்பை இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அரை லிட்டர் நீரில் போட்டு, 200 மி.லி யாக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, பிள்ளை பெற்ற பெண்ணுக்குக் கொடுத்து வந்தால், கருப்பை அழுக்குகள் வெளியேறும். உதிரச் சிக்கல் தீரும்

08.  சதகுப்பை பூ , ஒரு பங்கு எடுத்து இருபது பங்கு கொதிக்கும் நீரில் சேர்த்து சற்று நேரம் கழித்து , வடிகட்டி, 200 மி.லி குடித்து வர, பிரசவித்த பெண்களுக்கு குருதிச் சிக்கலை வெளியேற்றும்.

09.  சதகுப்பை, மரமஞ்சள், கருஞ்சீரகம் சம அளவு எடுத்துப் பொடி செய்து பனவெல்லம் கலந்து சோம்பு நீருடன்கொடுத்து வர உதிரச் சிக்கல் தீர்ந்து  கருப்பை பலம் பெறும். (607)

10.  சதகுப்பை, மரமஞ்சள், கருஞ்சீரகம், பனை வெல்லம்  ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, பொடித்து, காலை மாலை என இரு வேளை  5 கிராம் சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்து சோம்பு நீர் குடித்து வந்தால் உதிரச் சிக்கல் நீங்கி, கருப்பையைப் பலப்படுத்தும்.

11.  சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் ஆகியவற்றை சமமாக எடுத்து அரைத்து வெல்லம் கலந்து 5 கிராம் அளவு தினசரி சாப்பிட்டு வந்தால் கருப் பை பலப் படும். உதிரச் சிக்கல் தீரும்.(219) 

12.  செம்பருத்திப் பூவுடன் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டுவந்தால் இரத்தப் போக்கு (உதிரப் போக்கு) உடனே நிற்கும்.(600)

13.  தும்பை இலை, உத்தாமணி இலை சமனளவு எடுத்து அரைத்து, சுண்டைக் காயளவு பாலுடன் சாப்பிட்டு, புளி, காரம் நீக்க உதிரச்சிக்கல், தாமதித்த மாதவிடாய் நீங்கும்.

14.  தொட்டாற் சுருங்கி முழுச் செடியையும் இடித்து சாறு எடுத்து 4 தேக்கரண்டி சாறுடன் 2 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உதிரப் போக்கு கட்டுப் படும்.

15.  நாயுருவிச் வேர் 10 கிராம் எடுத்து துண்டு துண்டாக்கி 100 மி.லி நீரில் போட்டு, பாதியாக காய்ச்சி, அந்த கசாயத்தை காலை மாலை வேளைக்கு 50 மி.லி வீதம் உள்ளுக்குக் கொடுத்து வந்தால் பெண்களுக்கு உண்டாகும் உதிரப் போக்கு கட்டுப்படும். உடற் சோர்வு நீங்கும்.. கை, கால் வீக்கம் விலகும். நாயுருவி இலைச் சாறும் வேர்க் கசாயத்திற்குப் பதில் தரலாம்.

16.  நாய் வேளை இலையைச்  சமைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் உதிரப் போக்கு, சரியாகும். (678)

17.  நாவல் மரத்தின் (முற்றிய மரம்) பட்டையை 10 X 5 செ.மீ அளவில் எடுத்து நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு தம்ளராக வரும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரு வேளையாக பத்து நாட்கள் குடித்து வந்தால் உதிரப் போக்கு கட்டுப்படும்.

18.  பிரண்டை உப்பு இரண்டு கிராம் எடுத்து நெய்யில் கலந்து இரண்டு வேளை கொடுத்தால் வலி குறையும். பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு, சூதகக் கடுப்பு குணமாகும்.

19.  மாசிக்காய்ப் பொடி, தேன் இரண்டையும் தலா அரைத் தேக்கரண்டி எடுத்து கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப் போக்கு, தீராத வயிற்று வலி ஆகியவை சீராகும்.

20.  மாதுளம் பூக்களையும் அருகம் புல்லையும் சம அளவு எடுத்து, காயவைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு ஒரு கிராம் அளவு எடுத்து   தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.

21.     வல்லரை இலை, உத்தாமணி இலைகளை அரைத்து ஒரு கிராம் அளவு எடுத்து 4 நாட்கள் மட்டும் வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் சூதகச் சிக்கல் தீரும்.  (1641)