01. அதிமதுரப் பொடி ஒரு கிராம் சர்க்கரை சேர்த்து காலை மாலை உண்டு வந்தால் சளி இருமல், தொண்டை வலி குணமாகும்.(133)
02. ஆடாதொடை மணப்பாகு 5 மி.லி எடுத்து வெந்நீரில் கலந்து நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வரக் கப இருமல் தீரும்.
03. ஆடாதொடை மணப்பாகு:- ஆடாதொடை இலைகள் 700 கிராம் எடுத்து, நறுக்கி, நெய்யில் வதக்கி, இலவங்கம் 10 கிராம், ஏலக்காய் 4 , சிற்றரத்தை 10 கிராம், அக்கரகாரம் 10 கிராம் ஆகியவற்றைத் தூள் செய்து போட்டு, பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து, தேன் பதமாகக் காய்ச்சி ஒரு சீசாவில் அடைத்து வைக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் நீர்க் கோவை தீரும். 3 வேளையாக தொடர்ந்து கொடுத்து வந்தால், நிமோனியா காய்ச்சல், மார்ச்சளி, காசம், நீர்த்த ஆஸ்துமா, எலும்புருக்கி நோய், கபம் இருமல் ஆகியவை போகும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டரை மி.லி முதல் 5 மி.லி வரை கொடுக்கலாம்.
04. ஆடாதொடைத் தண்டின் பட்டையை
எடுத்து குடிநீர் செய்தாகிலும், பொடி செய்தாகிலும் சுரம், இருமல், இளைப்பு, இரைப்பு ஆகிய நோய்களுக்குக் கொடுக்கலாம்.
05. ஓமம், கிராம்பு, உப்பு சேர்த்து நன்கு மென்று நீரை விழுங்கினால், இருமல் தொல்லை தணியும்.கபம், சளி கரையும்
06. கண்டங்கத்தரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 100 மி. லி வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி ( T.B
),ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் தீரும்
07. தவசி முருங்கைச் செடியை உலர்த்திப் பொடித்து சமனளவு சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டுவரச் சளி இருமல் தீரும்.
08. தூதுவேளை இலைகளை வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இருமல், சளி, கோழைக்கட்டு, மூச்சுத் திணறல் ஆகியவை சரியாகும். செரிமானத் தன்மை மிகும்.
09. பிரமிய வழுக்கை இலையை அரைத்து மார்பில் கட்டி வந்தால் சளி மிகுதியால் வரும் இருமல் தீரும். (1658)
10. மணித் தக்காளிக் கீரை ஒரு கைப்பிடி, மிளகு 5, திப்பிலி 2, மஞ்சள் தூள் 2 சிட்டிகை, சேர்த்து நன்றாக அரைத்து தேன் கலந்து உட்கொண்டால், கபம், இருமல் தணியும்.
11. முசுமுசுக்கை இலையை ஊற வைத்த புழுங்கல் அரிசியுடன் சேர்த்து அரைத்து, சிறிது உப்புக் கூட்டி, அடை சுட்டுக் கொடுத்துவர கோழைக்கட்டு, இருமல், ஈளை நீங்கும்.
12. முசுமுசுக்கை இலையை மழைக் காலங்களில் சாப்பிட்டு வர சளி இருமல் வரவிடாமல் தடுக்கலாம். (115)
13. முசுமுசுக்கை வேர் 120 கிராம், ஆடாதொடை வேர் 80 கிராம், திப்பிலி 10 கிராம், சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், இலவங்கம் 5
கிராம் உலர்த்திப் பொடித்து 5 அரிசி எடை கறுப்பு வெற்றிலையுடன் உட்கொண்டு பால் அருந்திவரச் சுவாச உறுப்பு துப்புரவாகும். உறைந்த சளி வெளியேறும். இருமல் தீரும்.
14. மூக்கிரட்டை வேர் 30 கிராம், அறுகம்புல் 30 கிராம், மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிக்கட்டி தினசரி 3 வேளை குடித்து வரச் சளி இருமல் தீரும்.
15. மூக்கிரட்டை வேர் 30 கிராம், மிளகு 4 எண்ணிக்கை, உத்தாமணிச் சாறு 50 மி.லி ஆகியவற்றை 100 மி.லி விளக்கெண்ணெயில் காய்ச்சி ஆறவிட்டு வடிக்கட்டி வைத்துக் கொண்டு 6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி, அதற்கு மேல் 30 மி.லி வீதம் வாரம் ஒன்று அல்லது 2 முறை கொடுத்துவரக் குழந்தைகளுக்குக் காணும் கப இருமல் தீரும்.
16. மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்துவர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணறல் தீரும்.
17. விராலி இலை இருபது கிராம் எடுத்து இடித்துக் கால் லிட்டர் நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி அதில் 20 மில்லியைச் சிறிது பால் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள், கணச்சூடு, இருமல், சளி ஆகியவை தீரும்.
18. விளாக் கொழுந்து புன்னைக் காயளவு அரைத்துப் பால், கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் சளி இருமல் தீரும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )15]
{29-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக