01. அதிமதுரப் பொடி 1 அல்லது 2 கிராம் தேனில் குழைத்து சப்பிட்டு வர இருமல் குணமாகும். (88)
02. அந்தரத்
தாமரை இலைச்சாற்றை 25 மி.லி எடுத்து தேனுடன்
கலந்து காலை, மாலை 5 நாட்கள்
கொடுத்து வந்தால் நீர்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.
03. ஆடாதொடை இலைச் சாறும் தேனும் சம அளவு சர்க்கரை கலந்து தினம் நான்கு வேளை கொடுத்து வந்தால் இருமல் தீரும்.
04. இஞ்சிச் சாறு, மாதுளம் பழச் சாறு வகைக்கு 15 மி.லி எடுத்து 15 மி.லி தேன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.(121)
05. இன்புறா ( சாயவேர் ) , வல்லாரை வகைக்கு 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 150 மி.லி யாகக் காய்ச்சி 50 மி.லி வீதம் 3 வேளையாகக் கொடுத்துவர இருமல் தீரும்.
06. இன்புறா, வல்லாரை வகைக்கு 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 150 மி.லி யாகக் காய்ச்சி காலை மாலை இரு வேளையும் 30 மி.லி வீதம் கொடுத்து வரச் சுவாசகாசம், இருமல் குணமாகும்.
07. எலுமிச்சைச் சாறும் தேனும் சமபங்கு கலந்து அருந்தினால் கபம், இருமல் நீங்கும்.
08. ஏலக்காயை எடுத்து உரித்து அதிலிருந்து சில ஏல அரிசிகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் இருமல் குறையும்.
09. ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, கொத்துமல்லி விதை இந்த ஐந்தையும் சேர்த்து கசாயம் செய்து பருகிவந்தால் குற்றிருமல் குணமாகும்
10. ஓமவல்லி இலைக் காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுத்து வந்தால் இருமல் தீரும்.
11. கஞ்சாங்கோரை இலை 10 கிராம், மிளகு ஒரு கிராம் சேர்த்து அரைத்து வெந்நீரில் கலந்து கொடுத்தால் இருமல் தீரும்.
12. கடுகை மைய இடித்து தூள்செய்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை எடுத்து ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் காலையில் ஏற்படும் இருமலுக்கு நல்லது. இருமல் குணமாகும். (156) (184)
13. கண்டங்கத்தரிப் பழத்தைக் காய வைத்துப் பொடித்து அரைத் தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட இருமல் விலகும்.
14. கரிசலாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய் வகைக்கு 2 லிட்டர், அதிமதுரத் தூள் 40 கிராம் சேர்த்து பதமுறக் காய்ச்சி, வடிக்கட்டி காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர இருமல் தீரும்.
15. கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 30 கிராம் , சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு ஒரு முடக்கு வீதம் கொடுக்க இருமல் தீரும்
16. கொள்ளுடன் மிளகு சேர்த்து வேக வைத்து உண்டு வந்தால் இருமல் குணமாகும்.
17. கோவை இலை 30 கிராம் எடுத்து 200 மி.லி நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி யாகக் காய்ச்சி காலை மாலை குடித்து வர இருமல் தீரும்.
18. சிறுகுறிஞ்சான் வேருடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, தண்ணீர் கால் பாகமாகச் சுண்டியதும் வடித்துக் குடிக்க இருமல் தீரும்.
19. சிற்றரத்தைப் பொடி1 கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். (120)
20. சீந்தில் கொடி, கோரைக் கிழங்கு, சுக்கு, கண்டங்கத்தரி, சிற்றரத்தை ஆகியவற்றைத் தலா 5 கிராம் எடுத்து இடித்து, இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வந்தால் இருமல் தணியும்.
21. சீரகத்தைப் பொன் வறுவலாக வறுத்து, பொடி செய்து கற்கண்டு சேர்த்துச் சாப்பிட இருமல் குணமாகும். (147)
22. சுக்குடன் அதிமதுரம் சேர்த்து, பொடித்து, உட்கொண்டு வந்தால், இருமல் சரியாகும்.
23. சுக்குப் பொடி அரைத் தேக்கரண்டியுடன் சம அளவு புதினாச் சாறும், சிறிதளவு உப்பும் சேர்த்து
உட்கொண்டால் இருமல் நீங்கும்.
24. செந்நாயுருவியின் உலர்ந்த வேர்ப்பட்டையுடன் சமனெடை மிளகும் சேர்த்துப் பொடித்து கால் கிராம் தேனில் குழைத்துக் காலை மாலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
25. தவசி முருங்கை இரசத்தை (சாறு) வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு, கொடுத்து வந்தால் மூக்கில் நீர் பாய்தல், உண்ணாக்கு நோய், ஐயம் (கபம்), இரைப்பு, பொடியிருமல் ஆகியவை தீரும்.
26. தவசி முருங்கைச் செடியை முழுமையாக உலர்த்திப்பொடித்துச் சமனளவு சர்க்கரைப்பொடி கலந்து அரைத் தேக்கரண்டி தேனில் குழைத்து உண்ண்டு வர சளி, இருமல் ஆகியவை தீரும்.
27. தான்றிக் காய் தோலின் பொடியுடன் திப்பிலிப் பொடியும் மிளகுப் பொடியும் சம அளவு கலந்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும். நுரையீரல் பலப்படும்.
28. தான்றிக் காய், அதிமதுரம், திப்பிலி சேர்த்துக் கசாயம் செய்து 60 மி.லி வரை குடித்தால் இருமல் தீரும்; செரியாமை குணமாகும். (Harish)
29. திப்பிலிப் பொடி அரைத் தேக்கரண்டி எடுத்து தேன் மற்றும் கம்மாறு வெற்றிலைச் சாறுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல், சுரம் ஆகியவை குறையும்.
30. திப்பிலிப் பொடியை கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சிச் சாறு கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்து 50 – 60 மி.லி அளவு உள்ளுக்குக் கொடுத்தால் இருமல், தும்மல் போன்றவை குணமாகும்.
31. திப்பிலிப் பொடியைப் பசுவின் பால் விட்டுக்காய்ச்சி அருந்தி வரலாம். இருமல், முப்பிணி ( வாதம், பித்தம், சிலேத்துமம் ) சரியாகும்
32. திப்பிலியை வறுத்து பொடி செய்து அரை கிராம் எடுத்து காலை மாலை தேனில் குழைத்து உண்டு வந்தால் இருமல் தீரும். (204)
33. திருநீற்றுப் பச்சிலை இலைச் சாறுடன் சமனளவு தேன் கலந்து வேளைக்கு 30 மி.லி வீதம் கொடுத்து வர இருமல் தீரும். (1381)
34. துளசி இலையுடன் மிளகு, சுக்கு சேர்த்து கசாயம் வைத்து 30 மி.லி. குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
35. தூதுவேளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து
தூள் செய்து, கோஷ்டம் 5 கிராம் சேர்த்து, பதமாய்க் காய்ச்சி
வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு எடுத்து தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான்
இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.
36. தூதுவேளை இலைப்
பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
37. தேன் சிறிதளவு எடுத்து கடுகு சேர்த்து
அரைத்துக் குடித்தால் ஆஸ்துமா, கபம், இருமல் போகும்.
38. நாயுருவி வேர்க் கசாயம் அல்லது இலைச் சாறு காலை மாலை உள்ளுக்குக் கொடுத்து வந்தால் ஒவ்வாமையால் வரும் இருமல் தீரும்.
39. நாய்த்துளசிச் சாறு எடுத்து 30 துளி பாலுடன் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால் இருமல் தீரும் (123)
40. பவளமல்லி இலைச் சாற்றுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் இருமல் குறையும்.
41. பனங்கற்கண்டுடன் மாதுளம் பூப் பொடி சேர்த்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
(187)
42. பால் சுண்டைகாயைச் சமைத்து உண்டால் இருமல் தீரும்.
43. பிரமத்தண்டு (கழுதை முள்ளி) சமூலப் பால் 3 அரிசி எடை தேனில் கலந்து உண்டால் இருமல் தீரும்.
44. பிரமிப் பூண்டு இலைச் சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் சேர்த்து அருந்தி வந்தால் இருமல் தணியும்.
45. மஞ்சள் தூளுடன் நெய் சேர்த்து உட்கொண்டால் இருமல் கட்டுப் படும். மஞ்சள் சூரணம் தின்றால் குடல் பிரச்சினை சீராகும்.
46. மாதுளம் பூ மொட்டுகளை நன்கு உலர்த்தி, பொடி செய்து, 100 மி.கிராம் அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் கொடுத்தால் இருமல் குறையும்.
47. மாதுளம் பூக்களை உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டாலும் இருமல் நிற்கும்.
48. மாதுளம் பூப்பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.(187)
49. முடக்கத்தான் இலை, வேர் முதலியவைகளைக் குடிநீர் செய்து அருந்தினால் வாதம, மூலம், நாட்பட்ட இருமல் ஆகியவை போகும்
50. வாழைப்பூ வெள்ளை, வெறி, உடல் கொதிப்பு, சீதபேதி, ஆசன வாய்க் கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் ஆகியவற்றைத் தீர்க்கும். ஆண்மை தரும்.
51. வெண்டைக் காயை [ முற்றியது ] சூப் செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். (152) (1124)
52. வெந்தயக் கீரையைச் சமைத்துச் சப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். (161)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )15]
{29-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக