01. கண்டங்கத்தரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாகும்.(143)
02. காதறுந்த பழைய தோல் செருப்பை எடுத்துக் கையகலம் துண்டித்து நெருப்பில் போட்டுச் சுடவேண்டும். சுட்ட தோல் சாம்பலானதும் அதை எடுத்து கால் தேக்கரண்டி அளவுக்கு உள்ளங் கையில் வைத்து சிறிது தேன் கலந்து குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவ வேண்டும். நாள்தோறும் மூன்று வேளைகள் வீதம் ஏழு நாள்கள் தந்தால் கக்குவான் இருமல் காணாமற் போய்விடும். (ஆதாரம்: நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல் )
03. சோடா உப்பைத் தண்ணீரில் கலந்து குடிக்கக் கொடுத்தால் கக்குவான் இருமல் வேகம் குறைய குறையும்.(157)
04. துளசியின் பூங்கொத்து, திப்பிலி வசம்பு ஆகியவற்றைப் பொடி செய்து சிறிது சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் சாப்பிட்டு வந்தால் கக்குவான் இருமல் குணமாகும். (1398)
05. தூதுவேளை இலைச்சாறு 100 மில்லி,
பசு நெய் 30 மில்லி,இரண்டையும்
சேர்த்து தூள் செய்து, கோஷ்டம் 5 கிராம் சேர்த்து, பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு
தேக்கரண்டியளவு எடுத்து தினம் இரண்டு வேளை
சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும்
கொடுக்கலாம், பத்தியமில்லை.
06. நஞ்சறுப்பான் இலை சூரணம் கால் தேக்கரண்டி அளவில் தேனில் குழைத்து உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். (129)
07. நஞ்சறுப்பான் இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டி, தேனில் கலந்து கொடுத்து வர கக்குவான் இருமல் குணமாகும்.(129)
08. படிக்காரத்தைப் பொரித்து அலுமினியப் பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தினசரி ஒரு குன்றிமணி அளவு மூன்று வேளையும் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குறையும்.(163)
09. பெருங் காயம் சிறிது எடுத்து வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் தொடர் இருமல் குறையும். (158)
10. பொன்னாவாரை விதையைப் பசும் பால்விட்டு மைய அரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து வரக் கக்குவான் இருமல் குணமாகும். (146)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !
(02. ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை
சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )15]
{29-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக