மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 29 மே, 2021

இரத்தச் சர்க்கரை (Blood Sugar)

01.  ஆவாரம் பூ 10 கிராம், மிளகு 5 , திப்பிலி 3 , சுக்கு ஒரு துண்டு,சிற்றரத்தை ஒரு துண்டு, இவற்றை எடுத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு குவளை நீரில் போட்டு, பாதியாக வற்றக் காய்ச்சி, காலையில் அருந்தி வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின்  அளவு கட்டுப்படும்

 

02.  ஆவாரையின் துளிரை நன்கு அரைத்து, மோரில் கலந்து ஒருமண்டலம் (48 நாள்) குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

 

03.  இலவங்கப் பட்டைத் தூள் தினமும் ஒன்று முதல் ஆறு கிராம் வரை உணவாகவும் அல்லது மருந்தாகவும் எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். (Harish)

 

04.  கொய்யா இலைத் தேனீரை தொடர்ந்து 12 வாரங்கள் பருகி வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாகக் குறையும்..

 

05.  கொய்யாக் காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

 

06.  சிலந்திநாயகம் தனிச் சாறு ஒரு தேக்கரண்டி சம அளவு பாலில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, குருதிச் சர்க்கரை அளவு குறையும்.

 

07.  துளசி இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்து 200  மி.லி. தண்ணீர் சேர்த்து 60 மி.லி.யாகச் சுண்டக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

 

08.  நித்திய கல்யாணி வேர்ச் சூரணம் ஒரு சிட்டிகை வெந்நீரில் தினசரி 2 அல்லது 3 முறை கொடுக்கச் சர்க்கரை அளவு குறையும்.

 

09.  பரங்கி விதைப் பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தினமும்  மூன்று வேளைகள் வெந்நீரில் அருந்தி வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

 

10.  பாகல் இலைச் சாறு வாரம் ஒரு முறை சாப்பிடலாம். சர்க்கரை அளவு கட்டுப் பாட்டில் இருக்கும். (342)

 

11.  வெந்தயப்பொடி 2 – 3 கிராம் எடுத்து ஒரு நாளைக்கு இருவேளை வீதம் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

 

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.  ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021}

==========================================================


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக