மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 30 மே, 2021

உடல் - (48) வேர்வை நாற்றம் (Sweating - Bad Odour)

 

01.   கண்டங்கத்தரி இலைச் சாற்றை தேங்காயெண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசினால் வியவை நாற்றத்தைப் போக்கும்.

 

02.   கோரைக் கிழங்குப் பொடியைக் காய்ச்சாத பசும் பாலில் கலந்து குழைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் உடலில் வியர்வை நாற்றம் அகலும்.

 

03.   கோரைக் கிழங்கை (பச்சைக் கிழங்கு) அரைத்துக் குளித்து வந்தால் உடலில் உண்டாகும் துர்நாற்றம் விலகும்.

 

04.   பற்பாடகம் இலைகளைப் பறித்து வந்து பால் வீட்டு அரைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் உடல் நாற்றம் நீங்கும்.  (1468)

 

05.   விளக்கெண்ணையை (அசல்) அக்குளில் தேய்த்துக் கொண்டு படுக்கவும். வேர்வை நாற்றம் நாளடைவில் நீங்கிவிடும்.(951)

 

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

 

==========================================================


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக