மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 30 மே, 2021

உடல் - (47) வேர்க்குரு (Prickly Heat)

01.   சோறு வடித்த கஞ்சியை வேர்க்குரு மீது தடவி வைத்திருந்து ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால்  வேர்க்குரு நீங்கிவிடும்.(841) (1157)

 

02.   பப்பாளிப் பாலை வெங்காயச் சாறுடன் கலந்து வேர்க்குரு மீது தடவி வந்தால், அவை மறைந்து விடும். தேவைப் பட்டால் ஓரிரு முறை இவ்வாறு செய்யலாம். (1034)

 

03.   வெங்காயச் சாறினை வேர்க்குரு மீது தடவி வந்தால் வேர்க்குரு மறைந்து விடும். உடலும் குளிர்ச்சி பெறும்.(781)

 

04.   வெண்காரத்துடன் பப்பாளிப் பாலைக் கலந்து தடவலாம். வேர்க்குரு மறையும். (1036)


05. பனை நுங்கின் உள்ளே இருக்கும்  நீரை எடுத்துப் பூசி வந்தால், வேர்க்குரு நீங்கிவிடும்.


06. சந்தனத்தைக் குழைத்துப்  பூசி வந்தால் ஓரிரு நாளில் வேர்க்குரு நீங்கிவிடும்.

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

 

==========================================================


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக