மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 29 மே, 2021

இதய வலி (Chest Pain)

 

01.   ஓமவல்லி இலைகள் மூன்றினை எடுத்து காலையில் மென்று தின்று, ஒரு தம்ளர் வெந்நீர் அருந்தினால்  இதயவலி நீங்கும். மாலையில் கீரையாக உண்டால் சளித் தொல்லையும் நீங்கும். (109)

 

02.   கருந்துளசி இலை, செம்பருத்திப்பூ கசாயம் 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் குத்தும் வலி சரியாகும். (1393)

 

03.   கருந்துளசி இலை, மருதம் பட்டைக் கசாயம் சாப்பிட்டு வந்தால் சீரற்ற இதயத் துடிப்பு சரியாகும். (1394)

 

04.   செம்பருத்திப் பூ, கருந்துளசி இலை இரண்டும் சேர்ந்த கசாயம் இதயத்தில் ஏற்படும் குத்துவது போன்ற வலியைக் குணப்படுத்தும். (1393)

 

05.   துளசி இலை (கருந்துளசி நல்லது), செம்பருத்திப் பூ இரண்டையும் சேர்த்து கசாயம் வைத்து 10 நாட்கள் அருந்தி வந்தால், இதயத்தில் சுரீர் சுரீர் என்று குத்தும் வலி சரியாகும். (1393)

 

06.   துளசி விதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் எடுத்து ஒன்றாகக் கலக்கி சாப்பிட்டு வந்தால் இதய வலி குணமாகும்.  (1173)

  

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.  ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021}

==========================================================


 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக