மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 29 மே, 2021

இதய நோய் (Cardiopathy)

01.  கருங்காலிப் பட்டை, ஆவாரம் பூ, தாமரைப்பூ, மருதம் பட்டை, ரோஜாப்பூ ஆகியவை வகைக்கு 100 கிராம் எடுத்து ஏலக்காய், சுக்கு, திப்பிலி தலா 25 கிராம் சேர்த்து இலேசாக வறுத்து, பொடித்து ஒன்றாகக் கலந்து காலை மாலை இரு வேளைகள்  அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால், இதய நோய் சீராகும்.

 

02.  செம்பருத்திப் பூ, மருதம் பட்டை இரண்டும் சேர்ந்த கசாயம் 48 நாள் சாப்பிட்டு வந்தால் இதயநோய் குணமாகும். (1464)

 

03.  துளசிச் சாறு இதய நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாகும். (1284)

 

04.  துளசி இலைச் சாறுடன் சிறிது தேன்கலந்து வெந்நீரில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய் சாந்தமாகும்.  (1392)

 

05.  தேன் 2 தேக்கரண்டி எடுத்து அதில்  ஒரு தேக்கரண்டி இலவங்கப் பட்டைப் பொடியைக் கலந்து குழைத்து காலை உணவுடன் சேர்த்து தினசரி  சாப்பிட்டு வந்தால், இதய நோய் நெருங்காது. ஏற்கனவே மாரடைப்பு வந்தவர்கள் சாப்பிட்டு வந்தால் மீண்டும் மாரடைப்பு வராது.

 

06.  பூண்டுப் பற்களைச் சுட்டுச் சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் இதய நோய்க்கு நல்லது.   (1226)

 

07.  மணி தக்காளிக் கீரை மற்றும் அதன் பழத்தின் விதைகளை  உலர வைத்துப் பொடியாக்கி, அரைத் தேக்கரண்டி வீதம் காலை மாலை இரு வேளைகள் உட்கொண்டு வரலாம். இதய நோய் சீரடையும்.

 

08.  மருதம் பட்டை, செம்பருத்திப் பூக் கசாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய் குணமாகும்.  (1464)

 

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.  ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

                                                         ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021}

==========================================================


 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக