மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 29 மே, 2021

இருமல் - வறட்டிருமல் (Dry Cough)

01.  அதிமதுரம் ஒரு துண்டும் தாளிசபத்திரி சிறிதளவும் எடுத்து வாயில் இட்டு அடக்கிக் கொண்டால் வறட்டு இருமல் குணமாகும்(210)

 

02.  இண்டந்தண்டுச் சாறுடன் திப்பிலிப் பொடி சேர்த்து பொரித்த வெண்காரத்துடன் காலை மட்டும் மூண்று நாள் சாப்பிட்டு வர ட்டு இருமல் குணமாகும். (205)


03.  எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.(1781)

 

04.  கடுக்காய், சித்தரத்தை இரண்டையும் சிவக்க வறுத்து பொடி செய்து வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் ட்டு இருமல் குணமாகும், (118)

 

05.  கருவேலங் கொழுந்தைக் கசக்கிச் சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ட்டு இருமல் குணமாகும்.(172)

 

06.  கற்கண்டைப் பொடித்து சீரகப் பொடியுடன் சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிடுங்கள். வறட்டு இருமல் தணியும்.

 

07.  கொள்ளுக் கசாயத்துடன் திப்பிலிப் பொடி கால் தேக்கரண்டி கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

 

08.  சிற்றரத்தை, கடுக்காய்த் தோல் இரண்டையும் சிவக்க வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் வறட்டு இருமல்  குணமாகும்.(118)

 

09.  தாளிச பத்திரியுடன் அதிமதுரம் சேர்த்து வாயில் அதக்க, ட்டு இருமல் குணமாகும். (210)

 

10.  பவளமல்லி இலைப் பொடியை இரண்டு கிராம் எடுத்து வெற்றிலைச் சாறு கலந்து உள்ளுக்குக் கொடுத்தால்  வறட்டு இருமல்  குணமாகும்.

 

11.  பனங்கற்கண்டு, மஞ்சள் தூள், சிறிது மிளகுத் தூள் சேர்த்து காய்ச்சிய பால் வறட்டு இருமலைக் குணப்படுத்தும்.  (155)

 

12.  மஞ்சள் தூளுடன் சிறிது மிளகைத் தூள் செய்து கலந்து இரண்டையும் பனங் கற்கண்டு சேர்த்து பாலில் காய்ச்சிச் சப்பிட்டு வர ட்டு இருமல் குணமாகும்.  (155)

 

13.  மயில் இறகு ஒன்றை எடுத்து அகல் விளக்கில் எள் எண்ணெய் ஊற்றித் திரி போட்டு தீபம் ஏற்றி, அந்தத் தீபத்தில் காட்டி எரித்துச் சாம்பலாக்கி மூன்று சிட்டிகை அளவு எடுத்து, தேன் கலந்து குழைத்துச் சாப்பிட்டால் ட்டு இருமல் குணமாகும். இம்மருந்தை காலை மாலை என 3 நாட்கள் சாப்பிட வேண்டும்.

 

14.  மாதுளம் பழச் சாறுடன் இஞ்சிச் சாறைச் சம அளவு கலந்து ஒரு தேக்கரண்டி எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட வறட்டு இருமல் தணியும்.

 

15.  மாதுளம் பழச் சாறு, இஞ்சிச் சாறு வகைக்கு 15 மி.லி எடுத்து தேன் கலந்து வேளைக்கு 15 மி.லி வீதம் மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு தீரும்.  (121)

 

16.  மிளகுடன் பொரிகடலை சேர்த்துப் பொடியாக்கி ஒவ்வொரு தேக்கரண்டி வீதம் மூண்று வேளை உண்டால் ட்டு இருமல் குணமாகும். (165)

 

17.  விளாமரப் பட்டையை இடித்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இந்தக் கசாயத்தை வடிகட்டிக் குடித்து வந்தால் வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய்க் கசப்பு போன்றவை மாறும்.


 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021} 

==========================================================


 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக