மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கண் - நோய் ( Ophthalmia)

 

01.   அதிமதுரம், அமுக்கிரா கிழங்கு இரண்டையும் சம எடை எடுத்து தூள் செய்து தினசரி கால் தேக்கரண்டி நெல்லிக் காய் சாற்றில் கலந்து  சாப்பிட்டு வர கண் நோய்கள் குணமாகி விடும். (022)

 

02.   அன்னாசிப் பழம் சிறிதளவாவது தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குணமாகும்.(1132)

 

03.   ஆடாதொடை பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட, கண்களில் உண்டாகும் நோய்கள் தீரும்

 

04.   ஆவாரம் பூவை வதக்கிக் கண்ணோய்க்கு ஒற்றடம் கொடுக்கலாம்.

 

05.   குங்குமப்பூவைத் தாய்ப்பாலில்  குழைத்து கண் மீது பற்றுப் போட்டால் கண் நோய் குணமாகும்.(034)

 

06.   த்திச் சாரணை இலைகளை அரைத்து சாறு எடுத்து தாய்ப்பாலுடன் கலந்து கண்ணுக்கு மை போல் இட்டு வந்தால், கண் நோய்கள் நீங்கும்.(007) (1815)

 

07.   சீரகம் ஒரு கரண்டி எடுத்து தூள் செய்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலை முழுகி வர கண் நோய் குணமாகி கண்கள் ஒளியுடன் திகழும்.(012)

 

08.   நிலப்பனைக் கிழங்கின் மேல் தோலையும் உள் நரம்பையும் போக்கி, உலர்த்திப் பொடித்து 5 கிராம் பொடியுடன் சர்க்கரை கூட்டிப் பாலுடன் கலந்து, காலை மாலை உட்கொள்ள கண் நோய்கள் போகும்

 

09.   நெல்லிக் காயை ஊசியினால் குத்தினால் ஒரு துளி நீர் வரும். அந்த நீரை கண்ணில் விட்டு வந்தால் கண் நோய்கள் குணமாகும். (023)

 

10.   பொன்னாங்கண்ணிக் கீரைச் சாறுடன் சம அளவு கரிசலாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய்ச் சாறு, பசும்பால், எடுத்து பாலில் அரைத்த அதிமதுரத்தை சிறிதளவு சேர்த்துக் காய்ச்சி, மெழுகு பதத்தில் வந்ததும் வடிகட்டி, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண் நோய் சரியாகும்.

 

11.   மஞ்சளை (காய்ந்த்து) பொடி செய்து தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய்கள் குணமாகும். ()33)

 

12.   முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண் நோய் வராது. வந்தாலும் குணமாகும். (1131)

 

13.   வெங்காயச் சாறு அரை அவுன்ஸ் காலை மாலை  நான்கு நாட்கள் கொடுத்தால் கண் நோய் தீரும்.(1183)

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

==========================================================


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக