01. அல்லி இதழ்களை அரிந்து கண்களின் மீது வைத்து கட்டி வர கண்சிவப்பு, எரிச்சல், நீர் வடிதல் இவற்றுக்கு நல்ல குணம் கிடைக்கும்.
02. ஆல்பக்கோடா விதை நான்கு, கடுக்காய் மூன்று, நெல்லிகாய் விதை இரண்டு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர, கண் சிவத்தல் அகலும் (028)
03. கருங்காலி இலை கைப்பிடி அளவு எடுத்து ரோஜா இதழ்களையும் எடுத்து ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து, முடிச்சுப் போட்டு, கண்கள் மூது வைத்து ஒற்றி வாருங்கள் கண் சிவப்பு, கண் எரிச்சல், கண் நோய் விலகும்.
04. நந்தியாவட்டைப் பூவின்
இதழ்களிலிருந்து சாறு எடுத்து சம அளவு தாய்ப்பால் சேர்த்து கண் சிவப்பு
குணமாக 2 துளிகள் கண்ணில் விடவேண்டும்.
05. நல்லெண்ணெயில் நந்தியாவட்டைப் பூக்களைப் போட்டு 30 நாட்கள் வெயிலில் வைத்து, கண்களில் 5 துளிகள்
விட, கண்ணெரிச்சல், கண்
சிவப்பு தீரும்.
06. நேத்திரப் பூண்டினை வேருடன் பிடுங்கி வந்து கழுவிச் சுத்தம் செய்து நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி இரண்டொரு துளிகள் கண்களில் விட்டு வந்தால் கண் சிவத்தல், கண் பீளை, சதை வளர்தல் நீங்கும். (37)
07. நேத்திரப் பூண்டின் சமூலம் (வேர், தண்டு, இலைகள்) எடுத்து சுத்தம் செய்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி, ஓரிரு துளிகள் வீதம் தினசரி 2 வேளைகள் கண்ணில் விட்டு வந்தால், கண் சிவத்தல், கண்ணில் பீளை தள்ளுதல், கண்ணில் சதை வளருதல் ஆகியவை குணமாகும்.
08. புளிய இலைக் கொழுந்தைப் பறித்து வந்து கண்களின் மேல் வைத்துக் கட்டி, ஒரு மணி நேரம் கழித்து எடுத்து விட்டால் கண் சிவத்தல் மறையும்.(031)
09. புளியம் பூவை அரைத்துக் கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டால் கண் வலி, கண் சிவப்பு மாறும். (041)
10. வில்வ மரத் தளிரைப் பறித்து வந்து வதக்கி இளஞ் சூட்டில் ஒற்றடம் கொடுத்தால் கண் வலி, கண் சிவத்தல், கண் அரிப்பு தீரும்
(039)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{31-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக