01. களாப் பூவை தூய்மையான நல்லெண்ணெய்யில் போட்டு வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளி நாள்தோறும் கண்களில் விட சதைப் படலம், இரத்தப் படலம் அகலும். (005)
02. களாப் பூவை நல்லெண்ணையில் இட்டு வெயிலில் ஊற வைத்து, வடிகட்டி, ஓரிரு துளிகள் கண்ணில் விட்டு வர கண்ணிலுள்ள கரும் படலம், வெண்படலம், இரத்தப் படலம், சதைப் படலம் குணமாகும்.(48)
03. நந்தியாவட்டைப் பூவின் சாற்றையும் சிறுகளாப்பூவின் சாற்றையும் கண் படலத்திற்கு, மூன்று துளிகள் கண்ணில் விட, கண் படலம் நீங்கும்.
04. நேத்திரப் பூண்டின் சமூலம் (வேர், தண்டு, இலைகள்) எடுத்து சுத்தம் செய்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி, ஓரிரு துளிகள் வீதம் தினசரி 2 வேளைகள் கண்ணில் விட்டு வந்தால், கண் சிவத்தல், கண்ணில் பீளை தள்ளுதல், கண்ணில் சதை வளருதல் ஆகியவை குணமாகும்.
05. நேத்திரப் பூண்டு வேர், , தண்டு, இலைகளைச் சமூலம் செய்து (முழுச்செடியையும் வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து) நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி, கண்ணில் ஓரிரு துளிகள் விட்டு வர, கண் சிவப்பு, கண்ணில் பீளை ஏற்படல், சதை வளருதல் குணமகும்.()37)
06. பிரமதண்டு இலைச் சாறு பால் ஒருதுளி கண்ணில் விடுவது கண்ணில் சதை வளருவதைத் தடுக்கும்.(024)
07. மூக்கிரட்டை வேரை உலர்த்திப் பொடித்துக் காலை மாலை ஒரு சிட்டிகை தேனில் குழைத்து உண்ண, மாலைக்கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.
08.
மூக்கிரட்டை வேர்ப் பொடி காலை மாலை ஒரு சிட்டிகை தேனில் சாப்பிட்டு வந்தால் பார்வை மங்கல் குணமாகும்.
(1547) கண் படலம் குணமாகும். (1574)
09. வேப்பங் கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து அரைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர கண்ணில் இருக்கும் படலம் மறைப்பு அகலும். காமாலை, மாலைக் கண், புழுவெட்டு நோய்கள் அகலும். (926)
10. வேப்பங்கொழுந்து, முதிர்ச்சியான இலை, ஆகிய இவ்விரண்டையும் இடித்து, அப்பொடியின் அளவிற்கு அரைப்பங்கு ஓமமும் உப்பும் சேர்த்துப் பொடித்து, புசிக்கத் தொடங்கின், அதனால், கண்ணிலிருக்கும் படல மறைப்பு, காமாலை, மாலைக்கண், புழு வெட்டு முதலிய நோய்கள் அகலும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{31-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக