மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கடி - விரியன் பாம்புக்கடி (Viper Bite)

 

01. இதில் பல வகை உண்டு.  கருவிரியன் பாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக  நீர்  வடியும் .  கடுப்பு  உண்டாகும் .  இதற்கு பழைய வரகு அரிசி  இருநூறு  கிராம்  கொண்டுவந்து பிரய்மரப்பட்டை  இருநூறு  கிராம்  தனித் தனியே  இடித்து  வெள்ளாட்டுப் பால்  கலந்து  மூன்று  நாள் உப்பு , புளி தள்ளி உண்ண,  விடம்  நீங்கும் .

 

02.   கட்டு விரியன் பாம்பு கடித்து விட்டால், கடித்த இடத்திற்கு மேல் ஒரு கட்டுப் போட்டு விஷம் உடலெங்கும் பரவாதபடித் தடுக்க வேண்டும். பின்பு கடிவாயைக் கீறி இரத்தத்தைப் பிதுக்கி வெளியில் எடுக்க வேண்டும். இரத்தத்துடன் ஒரு பகுதி விஷமும் வெளியில் வர இதனால் வாய்ப்பு உண்டு. ஐந்தாறு வாழைப் பட்டைகளை விரித்து அதன்மேல் பாம்பு கடித்த நபரை கோவணத்துடன் அல்லது ஜட்டியுடன் படுக்கவைத்து, ஒருதம்ளர் வாழைப் பட்டைச் சாறை உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். ஒரு நாள் இரவு மட்டும் தூங்க விடக் கூடாது.வாழைப் பட்டைச் சாறு பலன் தராவிட்டால் அல்லது உடனே கிடைக்காவிட்டால் சிறியாநங்கை என்னும் நில வேம்புச் சாறு கொடுக்கலாம். (ஆதாரம்: நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

==========================================================


 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக