02.
எருக்கன் பூவிற்குச் சமனெடை மிளகு சேர்த்து மெழுகு போல அரைத்து இரண்டு குன்றிமணி அளவுக்கு மாத்திரைகள் செய்து
நிழலில் உலர்த்திக் கொண்டு தினம் 2 வேளை ஒவ்வொரு மாத்திரை வீதம்
கொடுத்துவர முறை சுரம் நீங்கும்.
03.
எலுமிச்சம் பழம் சாறு பிழிந்து தேன் கலந்து 100 மி.லி. வீதம் சாப்பிட்டு வர மலேரியா சுரம் தீரும்.(176) (1167)
04.
செண்பகமரத்துப் பட்டையை 10 கிராம் நைத்து ஒரு புதுச் சட்டியில் போட்டு, ஒருகோப்பைத் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி, காலையில் அரைக் கோப்பையும் , மாலையில் அரைக் கோப்பையுமாக மூன்று நாட்கள் கொடுக்க முறைக் காய்ச்சல் குணமாகும்.
05.
நிலவேம்பு சமூலத்துடன், மிளகு, சுக்கு, வெட்டிவேர், சந்தனம், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல் சமூலம், பற்படாகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து கால் பங்காகக் காய்ச்சி, வடிகட்டி காலை மாலையாக இரண்டு வேளைகள், தலா 60 மி.லி வீதம் குடித்து வந்தால் அனைத்து விதமான சுரங்களும் தீரும். டெங்கு போன்ற சுரமும் குணமாகும்.
06.
நிலவேம்பு சமூலம் 50 கிராம், வெந்நீர் 1 லிட்டர், கிராம்புத்தூள் அல்லது பொடித்த ஏலம் 5 கிராம் எடை எடுத்து ஒன்று
கூட்டி 6 மணி நேரம் ஊறவைத்து, 30 மி.லி. வீதம் தினசரி 2 – 3 முறை கொடுத்துவர முறைச்சுரம், குளிர்ச்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை இவை போகும்.
07.
நிலவேம்பு, கண்டங்கத்தரி வேர் வகைக்கு கைப்பிடி அளவு, சுக்கு 10 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு 200
மி.லி
யாகக் காய்ச்சி தினசரி 3 வேளை கொடுத்து வந்தால் மலேரியா காய்ச்சல்
தீரும். (131) (200)
08.
நொச்சி
இலையைக் குடிநீர் செய்து வளிச் சுரங்களுக்குக் கொடுக்கலாம். குளிர் சுரம், முறைச்சுரம் ஆகியவை
தீரும்.
09.
நொச்சிக் கொழுந்து, மிளகுஇலை, மிளகாய் இலை, துளசியிலை,
இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக
எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்டு வந்தால் விட்டு
விட்டு வருகின்ற முறை சுரம் நீங்கும்.
10. பேய்மிரட்டி இலையை நீரில் கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வந்தால் குளிர் சுரம், வாத சுரம், முறைச் சுரம், மலக் கழிச்சல் ஆகியவை தீரும்.
11. பேரரத்தை, நிலவேம்பு வகைக்கு 5 கிராம் இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மி.லி
யாகக் காய்ச்சி வடித்து காலை மாலை பாதிப் பாதியாய்க் கொடுத்து வரக்
குளிர்காய்ச்சல், முறைக் காய்ச்சல் தீரும்.
12 விராலிப் பட்டையை உலர்த்திப் பொடித்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டுவரச் சளி, சளிக் காய்ச்சல், முறைக்காய்ச்சல், மலேரியா முதலிய நோய்கள் தீரும்.
13.
வேப்பங்
காயை உலர்த்திக்
கொட்டையை நீக்கிப் பொடி செய்து, 2 – 8 கிராம் வீதம் தினம் இருமுறை கொடுக்க, முறைக்காய்ச்சல் நீங்கும். உடல்
வலுக்கும்.
14. வேப்பங் காயை உலர்த்திய பொடியை வெந்நீரில் கொடுக்க, மலேரியாக் காய்ச்சல், மண்டையிடி குணமாகும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )22]
{05-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக