01. தமிழில் “வாத சுரம்” என்னும் சொல் ஆங்கிலத்தில் (Rheumatic Fever) என்பதைக் குறிக்கும். இந்தக் காய்ச்சல் வாதநோய்களால் (வளி நோய்களால்) ஏற்படுகிறது.
02. கறிவேம்பு ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு ஆகியவை வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம், அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு ஒரு முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாத சுரம் தீரும்.
03. நிலவேம்பு 10 கிராம் எடை, கிச்சிலித் தோல் 150 கிராம், கொத்தமல்லி 150 கிராம் இவைகளை
வெந்நீரில் சேர்த்து மூடிவைத்து, ஒரு மணி நேரம் சென்ற பின் வடிக்கட்டி 30 மி,லி. வீதம் தினசரி 2 – 3 முறை கொடுக்கலாம். மேற்கூறிய வாதசுரம் தீரும்.
04. நிலவேம்பு இலைக்
கருக்கு (கஷாயம்) சிக்கன்குனியா, டெங்கு போன்ற சுரங்களுக்கு
மிகச் சிறந்தது. வாதசுரம், நீர்க்கோவை, மயக்கம், பல்வகையான சுரங்களும்
நிலவேம்புக் கருக்கு குடித்து வரக் குணமாகும்.
05. நிலவேம்பு சமூலத்துடன், மிளகு, சுக்கு, வெட்டிவேர், சந்தனம், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல் சமூலம், பற்படாகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து கால் பங்காகக் காய்ச்சி, வடிகட்டி காலை மாலையாக இரண்டு வேளைகள், தலா 60 மி.லி வீதம் குடித்து வந்தால் அனைத்து விதமான சுரங்களும் தீரும். டெங்கு போன்ற சுரமும் குணமாகும்.
06. நொச்சி இலையைக் குடிநீர் செய்து வளிச் சுரங்களுக்குக் (வாத சுரம்) கொடுக்கலாம். குளிர் சுரம், முறைச்சுரம் ஆகியவை தீரும்.
07. பேய்மிரட்டி இலையை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வேது பிடிக்க வாத நோய்களால் ஏற்பட்ட சுரம் தீரும் .(201)
08. பேய்மிரட்டி இலையை நீரில் கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வந்தால் குளிர் சுரம், வாத சுரம், முறைச் சுரம், மலக் கழிச்சல் ஆகியவை தீரும்.
09. பேய்மிரட்டி இலையைக் கொதிக்க வைத்து வேது பிடித்தால், விடாத வாத சுரம் நீங்கும்.
10. மாவிலங்க இலை, சுக்கு, சீரகம் ஆகியவை சேர்த்துக் கசாயம் வைத்து மூன்று வேளைகள் சாப்பிட்டால் வாத சுரம் குணமாகும்.
(1564)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )22]
{05-06-2021}
==========================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக