01. கண்டங்கத்தரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி ஒரு பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க குளிர்காய்ச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும்.
02. தாளிசபத்திரி
சிறிதளவு, திப்பிலி, தூதுவேளை, சுக்கு, மிளகு, ஆகியவற்றைக் கசாயமாக்கி, வடிகட்டி, தேன் கலந்து அருந்தலாம். மூச்சுத் திணறல், ஆஸ்துமா, குளிர்காய்ச்சல், ஆகியவை குறையும்
03. துளசி இலையுடன் இஞ்சி சிறிது சேர்த்து கசாயம் வைத்து அருந்தி வந்தால் சீதளக் காய்ச்சல் குணமாகும். (1390)
04. நிலவேம்பு சமூலம் 50 கிராம், வெந்நீர் 1 லிட்டர், கிராம்புத்தூள் அல்லது
பொடித்த ஏலம் 5 கிராம் எடை எடுத்து
ஒன்று கூட்டி 6 மணி நேரம் ஊறவைத்து, 30 மி.லி. வீதம் தினசரி 2 – 3 முறை கொடுத்துவர
முறைச்சுரம், குளிர்ச்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை இவை போகும்.
05. நொச்சி இலையைக் குடிநீர் செய்து வளிச் சுரங்களுக்குக் கொடுக்கலாம். குளிர் சுரம், முறைச்சுரம் ஆகியவை தீரும்.
06. பேய்மிரட்டி இலையை நீரில் கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வந்தால் குளிர் சுரம், வாத சுரம், முறைச் சுரம், மலக் கழிச்சல் ஆகியவை தீரும்.
07. பேரரத்தை, நில வேம்பு சம அளவு சேர்த்து அரைத்து நீரில் சுண்டக் காய்ச்சி, காலை மாலை குடிக்கக் கொடுத்தால் குளிர் சுரம் குணமாகும்.(207)
08. மிளகரணை வேர்ப்பட்டை 20 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி காலை மாலை கொடுத்து வந்தால் குளிர்ச்சுரம் நீங்கும்
09. மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு
மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2 - 3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர்
காய்ச்சல் குணமாகும்
10. முருங்கை மரப் பட்டையை நீரிலிட்டு அவித்துச் சாறெடுத்து ரசமாக்கி உணவுடன் சாப்பிட்டு வரக் குளிர் காய்ச்சல், பாரிச வாயு, காக்கை வலிப்பு, சூதக சன்னி ஆகியவை தீரும்.
==========================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )22]
{05-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக