01. அகத்தி மரப் பட்டையையும், அகத்தி வேர்ப் பட்டையையும் சிதைத்துக் குடிநீராக்கிக் குடித்து வர நீர்க் கடுப்பு, நீர்த் தாரை எரிவு தீரும்.
02. அம்மான் பச்சரிசி இலையை நெல்லிக்காயளவு நன்கு அரைத்து, பசும்பாலில் கலக்கி, காலையில் மட்டும் 3 நாள் கொடுக்கச் சிறுநீருடன் குருதிப் போக்கு, மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் ஆகியவை தீரும்.
03. அறுகம்புல் சமூலம் 30 கிராம், கீழாநெல்லிச் சமூலம் 15 கிராம் எடுத்து மையாய் அரைத்துத் தயிரில் கலக்கிக் காலையில் குடிக்கச் சிறுநீர்த் தாரையில் உள்ள புண்ணால் ஏற்பட்ட நீர்க்கடுப்பு தீரும்
04. அறுகம்புல்லின்
வேரெடுத்து கணுவை நீக்கிவிட்டு 10 கிராம் எடுத்து, வெண்மிளகு 2 கிராம் சேர்த்துக் குடிநீரில் இட்டு வடித்து, அதில் 2 கிராம் வெண்ணெய் கூட்டி
உட்கொள்ள, மருந்தின் தீங்கு, இரச வேக்காடு, மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.
05. ஆவாரம் பூவைப் பாலுடன் சேர்த்துக் காய்ச்சி, தேன் கலந்து காலை மாலை இருவேளை குடித்தால் நீர்க்கடுப்பு நீங்கும்.
06. எலிக்காது இலையை 50 கிராம் எடுத்துச் சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி, வடித்து, வேளைக்கு 150
மி.லி. வீதம் காலை, மதியம், மாலை
சாப்பிட, நீரிழிவு, பிரமியம், நீர்க் கடுப்பு தீரும்
07. ஏலப் பொடியுடன் அன்னாசிப் பழச் சாறு கலந்து பருகினால், நீர்க்கடுப்பு விலகும்.
08. கடுகை அரைத்து, தொப்புளில் இலேசாகப் பற்றுப் போட்டால், நீர்க்கடுப்புக் குறையும்.
09. சிறுநெருஞ்சில் காயையும் வேரையும் பச்சரிசியோடு வேகவைத்து கஞ்சியை வடித்துச் சர்க்கரை கூட்டி, வெள்ளை, நீர்க்கடுப்பு ஆகியவைகளுக்குக் கொடுப்பதுண்டு
10. சோற்றுக் கற்றாழையின் சோற்றுச் சாறினை எடுத்துக் காலையில குடித்துவந்தால் கோடை காலங்களில் ஏற்படும் நீர்க்கடுப்பு, நீர்
எரிச்சல், உடல் காந்தல் ஆகியவை தீரும்.
11. சோற்றுக் கற்றாழையின் சோற்றினை எடுத்து நன்கு கழுவி விட்டு அதை சிறிது நீர் விட்டு மிக்சியில் அடித்து 50 மி.லி சாறு எடுத்து, வாழைத் தண்டுச் சாறு 200 மி.லி எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து அத்துடன் சீரகப் பொடி 25 கிராம், பச்சரிசி மாவு 10 கிராம் சேர்த்துக் கலக்கி குடித்தால் சிறுநீர்க் கடுப்பு நீங்கும். (961)
12. நன்னாரி வேர் ஐந்து கிராம் எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு, நீர்ச் சுருக்கு ஆகியவை குணமாகும்.
(1366)
13. புளியங்கொட்டைத் தோலை எடுத்து நன்கு உலர்த்திப் பொடி செய்து அரை கரண்டி எடுத்துப் பசும் பாலில் கலந்து சாப்பிட்டால் நீர்க் கடுப்பு விலகிவிடும்.(952)
14. மணித் தக்காளிக் கீரை கைப்பிடி அளவு, ஒரு தேக்கரண்டி பார்லி அரிசி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கசாயம் வைத்துக் குடித்து வருகிறவர்களுக்கு, நீர்க் கடுப்பு, சிறு நீர் எரிச்சல் கட்டுப்படும்.
15. மணித் தக்காளிக் கீரை கைப்பிடி அளவு, ஒரு தேக்கரண்டி பார்லி அரிசி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கசாயம் வைத்துக் குடித்து வருகிறவர்களுக்கு, நீர்க் கடுப்பு, சிறு நீர் எரிச்சல் கட்டுப்படும்.
16. வாழைத் தண்டுச் சாறு 200 மி.லி சோற்றுக் கற்றாழைக் கூழ் 50 மி.லி. சீரகப் பொடி 25 கிராம், பச்சரிசி 10 கிராம் சேர்த்துக் கலக்கிக் குடித்தால் நீர்க் கடுப்பு நீங்கும். (961)
17. வில்வ வேரைக் கொண்டுவந்து சுத்தம் செய்து மை போல் அரைத்து பாலுடன் கலந்து சாப்பிட்டால் நீர்க்கடுப்பு விலகிவிடும். (709) (957)
18. வில்வ வேர்ப் பொடியைப் பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.
(957)
19. வெங்காயத்தைப் பச்சையாக மென்று தின்றால் நீர்க்கடுப்பு நீங்கும்.(988) (1576).
20. வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து வாயில் போட்டு, தண்ணீருடன் சேர்த்து விழுங்கினால் நீர்க்கடுப்பு உடனே விலகும்.
21. வெள்ளரிக் காய் சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும். நீர்க் கடுப்பு குணமாகும். (1244)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )22]
{05-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக